Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வெந்து தணிந்தது காடு' சக்சஸ் பார்ட்டியில் சிவகார்த்திகேயன்

25 செப், 2022 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-attended-in-Vendhu-Thanindhathu-Kaadu-Success-Party

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்து பத்து நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்த நிலையில் படம் வெற்றி என படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கடந்த வாரம் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உறுதியாக அறிவித்தார்.

இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் குறைந்த நிலையில் படத்தின் சக்சஸ் பார்ட்டியைக் கொண்டாடியிருக்கிறது படக்குழு. அதில் சிலம்பரசன், கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு அழைப்பாளர்களாக சில சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிம்பு படத்தின் சக்சஸ் பார்ட்டியில் சிவகார்த்திகேயன் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்காக அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரையும், இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஓரிரு லட்சம் மதிப்புள்ள பைக்கையும் பரிசாக அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமூக வலைத்தளங்களில் மீண்டும் 'ஆக்டிவ்' ஆக சமந்தாசமூக வலைத்தளங்களில் மீண்டும் ... துல்கரின் நிம்மதியை கெடுத்த நெட்டிசன்.. அமைதியை தந்த ரசிகர் துல்கரின் நிம்மதியை கெடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)