Advertisement

சிறப்புச்செய்திகள்

5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் | சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் | கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 - அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டங்கள் ரிலீஸ் | நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லோகேஷ் கனகராஜுடன் போட்டி போட ஆசைப்படும் பாரதிராஜா

31 ஜூலை, 2022 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja-wants-to-compete-with-Lokesh-Kanagaraj

16 வயதினிலே படம் தொடங்கி கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதிராஜா, சமீபகாலமாக பல படங்களில் நடித்து வருவதோடு, அவ்வப்போது இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார். இந்த நிலையில் சென்னை வடபழனியில் தமிழ் திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய பாரதிராஜா, தமிழகம் தொடங்கி டில்லி வரை பல மேடைகளை பார்த்து உள்ளேன். ஆனால் பத்திரிகையாளர்கள் நடத்தும் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக உள்ளது. முன்பு ஒரு பத்திரிகையாளர் என்னை குறைத்து மதிப்பிட்டு செய்தி எழுதியபோது அந்த பத்திரிகை ஆசிரியரை நேரில் சென்று திட்டினேன். இப்போது நான்காவது தலைமுறை ஊடகத்தினரை பார்க்கிறேன். இந்த ஊடகச் சூழல் மிகவும் நட்பாக மாறியிருக்கிறது என்று கூறிய பாரதிராஜா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து கண்டிப்பாக பேச வேண்டும். சின்ன பையன்தான் ஆனால் சாதனைகளில் ரொம்ப பெரிய பையன். சினிமாவை நேசித்து பெரிய கனவுடன் வந்துள்ளார்.

எனக்கு இந்த லோகேஷ் கனகராஜ் ரொம்ப பிடித்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர், சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ரஜினி, கமலை இணைத்து மதுரையில் ஒரு விழா நடத்த வேண்டும் என்ற ஒரு ஆசை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் 16 வயதினிலே படத்தை இயக்கியபோது நானும், ரஜினியும் ஓட்டல் வராண்டாவில் படுத்து தூங்கினோம். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு நடிகர்தான் ரஜினி என்று பேசிய பாரதிராஜா, இப்போது நான் இரண்டு படங்களை இயக்கி வருகிறேன். நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். முக்கியமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டும் அளவிற்கு அவருடன் போட்டி போட்டு படம் எடுக்க வேண்டும். அவர் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு தற்போது ஏற்பட்டு இருக்கிறது என்று பேசினார் இயக்குனர் பாரதிராஜா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் வாரிசு படம் குறித்து சரத்குமார் கொடுத்த அப்டேட்விஜய்யின் வாரிசு படம் குறித்து ... அட்டைப்படத்திற்கு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா! அட்டைப்படத்திற்கு பிகினியில் ஹாட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)