Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்கனா உடன் மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்

26 ஜூன், 2022 - 01:10 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-joins-Kangana-Ranaut's-next-movie

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் படம் தக்காட் பெரிய தோல்வியை சந்தித்தது. சுமார் 90 கோடியில் தயாரான படம் 3 கோடிதான் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க நடிகை கங்கனா அடுத்தாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் உருவாக்க கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், ‛நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கனவு படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், இருவரும் எமர்ஜென்சி படத்தில் இணைகிறார்களா அல்லது வேறு ஏதேனும் புதிய படத்தில் இணைய உள்ளனரா என்பது தெரியவில்லை. கங்கனாவின் 'தலைவி' படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கர் - ராம்சரண் பட இசை: தமன் மகிழ்ச்சிஷங்கர் - ராம்சரண் பட இசை: தமன் ... தமிழ் சினிமா எங்கேயோ போய் விட்டது! காலரை துாக்குகிறார் இயக்குனர் கஸ்துாரி ராஜா தமிழ் சினிமா எங்கேயோ போய் விட்டது! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)