பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த ஆண்டு 103 பாடல்கள் எழுதி பாடல் உலகில் செஞ்சுரி அடித்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் தொடங்கி இன்றுவரை இதுவரை யாரும் செய்திராத மிகப்பெரிய சாதனை இது. இந்த ஆண்டு 34 படங்களில் 103 பாடல்களை எழுதியிருக்கிறார். இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, நீதானே என் பொன் வசந்தம், டோனி, பில்லா 2, தாண்டவம், விண்மீன்கள், படம் பார்த்து கதை சொல், அம்புலி ஆகிய படங்களின் முழு பாடல்களையும் நா.முவே எழுதியுள்ளார். அந்த வகையிலும் சாதனை படைத்துள்ளார்.
அவர் எழுதிய 103 பாடல்களில் 40 பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக நீதானே என் பொன் வசந்தம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, தாண்டவம், துப்பாக்கி, வழக்கு எண் 18/9, நண்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது 83 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அதுவும் சாதனையே.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நா.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.