தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தி அறிந்து நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டமாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். இசை குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கும் இசை மீது அளவுக்கு அதிகமான மோகம். அதனாலேயே இவரும் கர்நாடக இசையை கற்று தேர்ந்து பிரபலமானார். பல்வேறு மேடைகளில் கர்நாடக இசையை பாடியுள்ளார். சினிமாவிலும் நிறைய படங்களில் பாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாது 100க்கும் மேற்பட்ட ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய சபாக்களிலும் பாடியுள்ளார். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுக்க தனது இனிமையான குரலால் அனைவரையும் மயக்கியவர் நித்யஸ்ரீ மகாதேவன். இவருக்கும் மகாதேவன் என்பவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஸ்ரீ, தேஜாஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நித்யஸ்ரீயும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது நித்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது கணவரை பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக வீடு திரும்பி இருக்கிறார். தற்போது மகாதேவனின் உடலை கைப்பற்றி உள்ள போலீசார் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் வைத்துள்ளனர்.
குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னை காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.