மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
அதிரடி ஆகட்டும்... ஆங்கில வசனங்கள் ஆகட்டும்... ஹாலிவுட் பாணியை, தமிழ் சினிமாவில் கலந்து கட்டி கொடுப்பதில் வல்லவர், கவுதம்மேனன். தற்போது, பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவிருக்கும் என்னை அறிந்தால்... படத்திற்காக, ஒருபடி மேலே யோசித்து, வெளிநாட்டு ஒளிப்பதிவாளரையே களம் இறக்கியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில், கடந்த 20 ஆண்டுகளாக, ஒளிப்பதிவிற்காக பல விருதுகள் வாங்கி குவித்து சலித்துப்போய், அப்படியே இந்தியா பக்கம் வந்த டான் மெகார்தரை, தமிழ் சினிமாவுக்கு இழுத்து வந்திருக்கிறார் கவுதம். தல படத்திற்காக வந்தவர், தமிழ் மக்களுக்கு ஹாய் சொல்லாமல் போனால் எப்படி? இதோ, நம்முடன்... டான் மெகார்தர்!
டான் மெகார்தரின் கேமரா, தமிழ் சினிமா பக்கம் எப்படி?
எனக்கு இந்திய சினிமா புதுசு இல்ல. சயீப் அலிகான் நடிச்ச, கோ கோவா கான் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன். அப்போதான் கவுதமோட அறிமுகம் எனக்கு கிடைச்சது. என்னோட ஸ்டைல் கவுதமுக்கு பிடிச்சிருந்ததால, தன்னோட அடுத்த படத்துலேயே என்னை சேர்த்துக்கிட்டார். ஆனா, சூர்யா நடிக்க இருந்த அந்த படம் கைவிடப்பட்டதால, இப்போ, என்னை அறிந்தால்... படத்துல வெற்றிகரமா சேர்ந்துட்டோம்!
என்னை அறிந்தால்... படத்தில், அஜித், அனுஷ்கா மற்றும் த்ரிஷாவின் அழகு மெருகேறியிருக்க காரணம், தங்களின் கேமரா மேஜிக்தானே?
எல்லாம் டீம் வொர்க்! அஜித்தை பத்தி சொல்லணும்னா, செட்ல எப்பவும், எந்த ஷாட்டுக்கும், அவர் தயாரா இருப்பார். ஒளிப்பதிவுல ரொம்ப முக்கியம் லைட்டிங். அதுக்காக, இந்த இடத்துல நில்லுங்க; இப்படிப் பாருங்கனு, மாத்தி, மாத்தி சொல்லிக்கிட்டே இருப்பேன். அதை ரொம்பவே பொறுமையா கேட்டு, அவரோட ஸ்டைல்ல பக்காவா பண்ணுவார். அனுஷ்கா, த்ரிஷாவைப் பொறுத்தவரை, நான் பார்த்த நடிகைகள்லேயே ரொம்ப அழகானவங்க! இவங்க, அத்தனை பேரோட அழகையும், உள்ளது உள்ளபடி என் கேமரா பிரதிபலிச்சிருக்கு!
இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கும் அர்ரி அலெக்ஸா டிஜிட்டல் கேமரா பற்றி...?
இப்ப இருக்குற டிஜிட்டல் கேமராக்கள்ல, அர்ரி அலெக்ஸாதான் பெஸ்ட்; இதை பயன்படுத்துறதும் ரொம்ப சுலபம்! நட்சத்திரங்களோட சரும நிறத்தை, துல்லியமா காமிக்கிறதுல, இதை அடிச்சுக்க முடியாது! இந்த படத்துல வர்ற பல்வேறு கால கட்ட காட்சிகள், அர்ரி அலெக்ஸாவோட பெருமையை நின்னு பேசும்!
ஆஸ்திரேலியாவில் கேங்க்ஸ்டர் படங்கள்; இந்தியாவில் ஆக்ஷன் படம்! அடிதடின்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமோ?
ஹா... ஹா... இது யதார்த்தமா அமைஞ்ச விஷயம்! ஆனா, இந்த மாதிரியான படங்கள்லதான், ஒளிப்பதிவை சுவாரஸ்யமா பண்ண முடியும். லைட்டிங்ல புகுந்து விளையாடலாம்! மத்தபடி, எல்லாவிதமான படங்களுக்கும் ஒளிப்பதிவு பண்ணணுங்கற ஆசை, எனக்கும் உண்டு!
இந்திய சினிமா, தமிழ் சினிமா - ஒப்பிட்டு சொல்ல முடியுமா?
சினிமாவை, இந்தளவுக்கு நேசிக்கிற, கொண்டாடுற மக்கள், உலகத்துல வேற எங்கேயும் கிடையாது. ஆனா, தமிழ் சினிமாவை பொறுத்தவரை, காலங்காலமா இருக்கிற வழக்கமான பாணியிலதான், திரைப்படங்கள் உருவாகுது. இந்த பாணி, உலகத்தரத்துக்கு இணையாகாது! ஆனாலும், இப்ப வளர்ந்துட்டு வர்ற இளம் இயக்குனர்கள், யதார்த்தமான திரைப்படங்கள் எடுக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கறாங்க! இந்த முயற்சி, தமிழ் சினிமாவை, உலகத்தரத்துக்கு நிச்சயம் கொண்டு போகும்!
தமிழ் திரைப்படத் துறையில் தாங்கள் வியக்கும் விஷயம்?
உடை அலங்காரத்துக்கும், கலைத்துறைக்கும் இங்கே கொடுக்குற முக்கியத்துவம், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்தவகையில், என் திறமைகளுக்கு சவாலா இருந்த படம், என்னை அறிந்தால்...!
என்னை அறிந்தால்... தவிர, தமிழ்நாட்டில் உங்களை கவர்ந்த விஷயங்கள்?
இங்க இருக்கிற மக்கள், வெரி கூல்! முக்கியமா, திரைப்படத் துறையிலேயும், இசைத் துறையிலேயும் இருக்கிற கலைஞர்கள், அலட்டிக்காம, ஆரவாரம் இல்லாம அமைதியா இருக்காங்க. இந்தியாவுல, இயற்கையாவே ஒரு அமைதியான சூழல் இருக்குது. அதனால, அடிக்கடி நான் இந்த பக்கம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு!