Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கே.பாலசந்தர் ஒரு சகாப்தம் »

பாலச்சந்தர் - இளையராஜா வெற்றிக்கூட்டணி

25 டிச, 2014 - 12:27 IST
எழுத்தின் அளவு:

மறைந்த இயக்குநர் பாலசந்தர் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், திரையுலகம் உள்ளவரை பாலசந்தரின் புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் அவர், என்றார்.


மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி, தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமாக அமைந்த கூட்டணியாகும். இந்த இருவரும் இணைந்து 6 படங்களைப் படைத்துள்ளனர். அவற்றில் 2 படங்களுக்கு இளையராஜா தேசிய விருது பெற்றார். அந்த அளவு சகாப்தம் படைத்த கூட்டணியாக அமைந்தது. கே பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் முறையாக இளையராஜா இசையமைத்தது சிந்து பைரவி படத்துக்குத்தான். அந்தப் படத்தின் இசை ஒரு க்ளாஸிக் ஆக அமைந்தது. தேசிய விருதும் கிடைத்தது. இளையராஜாவுக்கு கிடைத்த இரண்டாவது தேசிய விருது அது. பின்னர், 1986-ல் பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்துக்கு புதுமையான முறையில் இசையமைத்தார் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன. 1987-ல் பாலச்சந்தர் இயக்கிய படம் மனதில் உறுதி வேண்டும். இதிலும் அருமையான பாடல்கள் தந்திருந்தார் இளையராஜா. 1988-ல் பாலச்சந்தர் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கிய படம் ருத்ர வீணை மற்றும் உன்னால் முடியும் தம்பி. ருத்ர வீணையில் சிரஞ்சீவி நாயகன். உன்னால் முடியும் தம்பியில் கமல். இரண்டு படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். மிக அருமையான பாடல்கள், நுட்பமான பின்னணி இசை. ருத்ரவீணைக்கு சிறந்த இசைக்கான தேசிய விருது கிடைத்தது. கே பாலச்சந்தர் - இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் புதுப்புது அர்த்தங்கள். அனைத்துப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. ஒரு தயாரிப்பாளராக 14 படங்களில் இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளார் பாலச்சந்தர். அவற்றில் மேற்கண்ட 6 படங்கள் தவிர, நெற்றிக் கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, பூ விலங்கு, எனக்குள் ஒருவன், ஸ்ரீராகவேந்திரர், வேலைக்காரன், சிவா, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை போன்றவை இருவரும் இணைந்த வெற்றிப் படங்களாகும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எம்.ஜி.ஆர். படத்தை மறுத்த பாலச்சந்தர்எம்.ஜி.ஆர். படத்தை மறுத்த பாலச்சந்தர் திரையுலகினர் அஞ்சலி திரையுலகினர் அஞ்சலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in