ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
அஜீத்தின், வேதாளம் படத்தில், தங்கை வேடத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷிற்கு அழைப்பு விடுத்தபோது, அவருடன், டூயட் பாட காத்திருக்கும் என்னை, தங்கையாக நடிக்க அழைப்பதா... என்று கடுப்படித்தார். இப்போது அதே படம், தெலுங்கில், சிரஞ்சீவி நடிப்பில், ரீ - மேக் ஆவதை அடுத்து, அப்படத்தில், லட்சுமிமேனன் நடித்த, தங்கை வேடத்தை கைப்பற்றி விட்டார். இப்போது மட்டும், தங்கை வேடத்தில் நடிப்பது ஏன்... என்று கேள்வி எழுப்பியவர்களிடம், அந்த படத்தில், கதாநாயகி வேடத்தை விட, தங்கை வேடம் தான், வெயிட் ஆனது என்ற உண்மையை, வேதாளம் படம் வெளிவந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். அதனால் தான், அப்போது விஷயம் தெரியாமல் விட்டதை, இப்போது பிடித்துக்கொண்டேன்... என்று கூறியிருக்கிறார், கீர்த்தி சுரேஷ். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்!
எலீசா