Advertisement

"மெலடி கிங்" வி.குமார்

பயோகிராபி

music director v kumar

Advertisement

  • இயற்பெயர் - வி குமரேசன்
  • சினிமா பெயர் - வி.குமார்
  • புனைப்பெயர் - மெலடி கிங்
  • பிறப்பு - 28-ஜுலை-1934
  • இறப்பு- 07-ஜனவரி-1996
  • பிறந்த இடம் - சென்னை - தமிழ்நாடு
  • படித்த பள்ளி - செயின்ட் பால்ஸ் பள்ளி - வேப்பேரி - சென்னை
  • படித்த கல்லூரி- லயோலா கல்லூரி - சென்னை
  • படிப்பு- பி ஏ.,
  • சினிமா அனுபவம் 1964-1987
  • துணைவி - கே ஸ்வர்ணா
  • குழந்தைகள் - சுரேஷ்குமார் (மகன்)
  • பெற்றோர் வரதராஜுலு - தனபாக்கியவதி

விருதுகள்

தமிழக அரசால் "கலைமாமணி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். அவர்களால் "மெல்லிசை மாமணி" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

சுவாரஸ்யங்கள்

வி குமார் பற்றிய சுவாரஸ்யங்கள்

Left Quote தொலைபேசி இலாகாவில் பணியாற்றி வந்தவர் வி குமார். இசைக்குழு ஒன்றை அமைத்து, அவ்வப்போது நிகழ்ச்சிகளும் வழங்கி வந்தார். Right Quote

Left Quote தபால் இலாகாவில் பணிபுரிந்து வந்த வி குமாரின் நண்பர் ராயப்பன், மணிவேந்தன் என்ற புனைப் பெயரில் "கண் திறக்குமா" என்ற நாடகத்தை மியூசியம் தியேட்டரில் அரங்கேற்றினார். இந்நாடகத்திற்கு இசை அமைத்தது வி குமார். இதுவே வி குமார் இசையில் வந்த முதல் நாடகமாகும். Right Quote

Advertisement

கே.பாலசந்தரின் ராகினி ரெக்ரியேஷன்" சார்பில் "வினோத ஒப்பந்தம்" என்ற பாலசந்தரின் நாடகத்திற்கு முதன் முதலாக வி குமார் இசையமைத்தார்.

வி.குமார் இசையமைத்த முதல் திரைப்படம் கே பாலசந்தரின் இயக்கத்தில் நடிகர் நாகேஷ் நடித்து வெளிவந்த "நீர்க்குமிழி".

"நீர்க்குமிழி" திரைப்பட இசையமைப்பிற்கு, பக்க பலமாகவும், அசோசியேட் இசை அமைப்பாளராகவும் இருந்தவர் ஏ கே சேகர். இன்றைய இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் தந்தையாவார்.

வி குமார் இசையமைப்பில் வெளிவந்த ஒரே சிவாஜி திரைப்படம் "நிறைகுடம்".

"வெள்ளி விழா" திரைப்படத்தில் வரும் "உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா"எனும் பாடல் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் வி குமார் இசையில் பாடிய பாடல்.

வி குமார் இசையமைத்து, கே பாலசந்தர் இயக்கிய "எதிர் நீச்சல்" திரைப்படத்தில் வரும் "என்னம்மா பொன்னம்மா பக்கம் வாம்மா வாம்மா" என்ற பாடலுக்கு மட்டும் இசையமைத்தது மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

"இவள் ஒரு சீதை" திரைப்படத்தில,; எஸ் பி பாலசுப்ரமணியம் பாடி இன்றுவரை அனைவராலும் ரசிக்கக் கூடிய "பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு" என்ற வி குமாரின் பாடல் மெட்டிற்கு வெறும் ஐந்தே நிமிடங்களில் பாடல் புனைந்திருந்தார் கவியரசர் கண்ணதாசன்.

இன்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில,; இன்றைய தலைமுறை குழந்தைகளும் விரும்பிப் பாடும் "வா வாத்தியாரே வூட்டாண்டே" என்ற "பொம்மலாட்டம்" படப் பாடல் வி குமார் இசையில் நடிகை மனோரமா பாடியது. ஏல் ஆர் ஈஸ்வரி பாடவேண்டிய இந்தப் பாடல், அவர் கிடைக்காததால,; மனோரமாவையே பாட வைத்துவிட்டார் வி குமார். எத்தனையோ பாடல்களை மனோராமா பாடியிருந்தாலும், அவர் பின்னணிப் பாடியதில் இப்பாடல் முதன்மையானது என்றால் அது மிகையன்று.

வி குமார், கே பாலசந்தர் கூட்டணியில் கடைசியாக வந்த படம் "அரங்கேற்றம்" படம் வெளியான ஆண்டு 1973.

வி.குமார் இசையில், கவிஞர் வாலி பாடல்கள் எழுதிய முதல் படம் "மேஜர் சந்திரகாந்த்". இயக்கம் கே பாலசந்தர்.

"முக்தா பிலிம்ஸ்" நிறுவனத்திற்கு வி குமார் இசையமைத்த முதல் படம் "நினைவில் நின்றவள்".

தெளிந்த நீரோடை போன்ற மெல்லிய, சாந்தமான பாடல்கள் என்றால் பி சுசிலாவிற்கும், சிருங்காரமிக்க, ஆர்பாட்டமான பாடல்கள் என்றால் அது எல் ஆர் ஈஸ்வரிக்கும் என்றிருந்த திரையுலகில் மாற்றம் கொண்டு வந்தார் வி குமார். "வெள்ளி விழா" திரைப்படத்தில் வரும் "காதோடுதான் நான் பாடுவேன்" என்ற இதமான மெல்லிய பாடலை எல் ஆர் ஈஸ்வரிக்கும், "நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்"என்ற ஆர்பாட்டமான பாடலை பி சுசிலாவிற்கும் தந்து வெற்றி கண்டவர் வி குமார். இதில் முந்தைய பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

நீண்ட காலமாக திரையிசையில் ஒலிக்காத ஏ எம் ராஜாவின் குரல், "முத்தாரமே உன் ஊடல் என்னவோ"என்ற "ரங்கராட்டினம்" படப் பாடல் மூலம் மீண்டும் ஒலிக்கச் செய்த பெருமை வி குமாரையே சாரும்.

"வாழ்வில் சௌபாக்கியம் வந்தது", "திருக்கோவில் தேடி ரதிதேவி வந்தாள்", "உன்னிடம் மயங்குகிறேன்","கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்" ஆகிய பாடல்கள் 70களில், அன்றைய விவிதபாரதியில் வரும் "உங்கள் விருப்பம்" மற்றும் ரேடியோ சிலோனில் ஒலிபரப்பப்படும் "விடுமுறை விருப்பம்" ஆகிய நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு ஒலிபரப்பு செய்த பாடல்கள் என்பது அன்றைய வானொலிப் பிரியர்கள் அறிந்த ஒன்று.

வரலாறு

music director v kumar

Advertisement

தமிழ் திரையுலகில் எம் எஸ் விஸ்வநாதன், கே வி மஹாதேவன் என்ற இரண்டு ஜாம்பவான்கள் கோலோச்சியிருந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனிப் பாணியுடன் ஒரு இசை சாம்ராஜ்யத்ததை உருவாக்கி, பல ஆண்டுகள் பணிபுரிந்து எண்ணற்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான செவிக்கினிய கீதங்களை தந்தவர் இசை அமைப்பாளர் வி குமார். இவரது மனைவி திருமதி கே ஸ்வர்ணா, அவரும் ஒரு சிறந்த பின்னணிப் பாடகி ஆவார்.

 

"ஜானகி சபதம்" திரைப்படத்தில் வரும் "இளமைக் கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்", "மக்கள் குரல்" திரைப்படத்தில் வரும் "வஞ்சிச் சிட்டு நெஞ்சைத் தொட்டு",நல்ல பெண்மணி திரைப்படத்தில் வரும் "இனங்களிலே என்ன இனம் பெண் இனம்", "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு" படத்தில் வரும் "கண்ணெல்லாம் உன் வண்ணம்", "தூண்டில் மீன்" திரைப்படத்தில் வரும் "என்னோடு என்னென்னவோ ரகசியம்" போன்ற, தமிழ் திரையிசை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத பல அற்புதமான பாடல்களை அழகான குரல்வளத்தால் தனது கணவரும், இசையமைப்பாளருமான வி குமார் அவர்களின் இசையமைப்பில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். இசை ஆர்வம் இல்லாமல் இருந்த சிறுவயது குமாருக்கு தனது சகோதரிக்கு வீட்டிலேயே இசை பயற்சி கொடுக்கப்பட்டதை பார்க்க நேர்ந்த போது, இசை ஆர்வம் ஏற்பட்டு வயலின் மற்றும் ஆர்மோனியம் கற்க பயிற்சி எடுத்துக் கொண்டார்.

 

பதினேழு, பதினெட்டு வயதில் வாத்தியக் குழுவில் இணைந்து வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ஆரம்ப காலங்களில் ஓ.எம்.ஐ.ஏ விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், ராகினி ரெக்ரியேஷன் போன்ற குழுக்களின் நாடகங்களுக்கு இசையமைத்து வந்த வி குமாருக்கு, பிரபல தயாரிப்பாளர் ஏ கே வேலன்,கே பாலசந்;தரின் நாடகமான "நீர்க்குமிழி"யை திரைப்படமாக எடுக்க முற்பட்டபோதே, படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பையும் வி குமாரிடம் ஒப்படைத்தார். கே பாலசந்தருக்கு எப்படி அது முதல் படமோ, அதேபோல் வி குமாருக்கும் அதுவே முதல் படமும் ஆனது. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்தது.

 

குறிப்பாக அந்த காலகட்டங்களில் வந்த கே பாலசந்தரின் பெரும்பாலான படங்களுக்கு வி குமாரே இசையமைத்து வந்தார் எனலாம். நீர்க்குமிழி, "நாணல்", "மேஜர் சந்திரகாந்த்", "எதிர் நீச்சல்", "இரு கோடுகள்", "பத்தாம் பசலி", "நவக்கிரஹம்",நூற்றுக்கு நூறு, "அரங்கேற்றம்", "வெள்ளி விழா" என இந்த ஜோடியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. நினைவில் நின்றவள், "பொம்மலாட்டம்", "ஆயிரம் பொய்", "நிறைகுடம்" என இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கிய முக்தா பிலிம்ஸ் படங்களுக்கும் அருமையான பாடல்;களை அள்ளி வழங்கியிருக்கின்றார் இசையமைப்பாளர் வி குமார்.

 

ஏறக்குறைய 150 படங்கள் வரை இசையமைத்திருக்கும் வி குமாரின் தேனினும் இனிய எண்ணற்ற கீதங்களை இவர் இசையமைத்தது என்று தெரியாமலேயே வானொலியில் கேட்டு மகிழும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. எம் எஸ் வி காலத்திலேயே அவருக்கு இணையாக பல அற்புதமான பாடல்களை தந்த இந்த இசை வித்தகருக்கு சரியானதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்ற ஏக்கம் தமிழ் திரையிசை ரசிகர்களிடம் இன்றும் உண்டு என்பது திண்ணம்.

திரைப்படங்கள்

வி குமார் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள் சில

1 நீர்க்குமிழி - 1965

2நாணல் - 1965

3 மேஜர் சந்திரகாந்த் - 1966

4 நினைவில் நின்றவள் - 1967

5பொம்மலாட்டம் - 1968

6எதிர்நீச்சல் - 1968

7 ஆயிரம் பொய் - 1969

8நிறைகுடம் - 1969

9இரு கோடுகள் - 1969

10 செல்லப்பெண் - 1969

11 பத்தாம்பசலி - 1970

12பெண் தெய்வம் - 1970

13 நவக்கிரஹம் - 1970

14 நூற்றுக்கு நூறு - 1971

15வெகுளிப்பெண் - 1971

16பாட்டொன்று கேட்டேன் - 1971

17 ரங்கராட்டினம் - 1971

18அப்பா டாட்டா - 1972

19 டெல்லி டூ மெட்ராஸ் - 1972

20 தெய்வ சங்கல்பம் - 1972

21வெள்ளி விழா - 1972

22உனக்கும் எனக்கும் - 1972

23மாப்பிள்ளை அழைப்பு - 1972

24பெத்தமனம் பித்து - 1973

25அரங்கேற்றம் - 1973

26 தெய்வக் குழந்தைகள் - 1973

27கட்டிலா தொட்டிலா - 1973

Advertisement

28மல்லிகைப் பூ - 1973

29பொன்வண்டு - 1973

30பெண்ணை நம்புங்கள் - 1973

31அவளுக்கு நிகர் அவளே - 1974

32ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - 1974

33ஸ்வாதி நட்சத்திரம் - 1974

34ராஜநாகம் - 1974

35கலியுகக் கண்ணன் - 1974

36தாய்ப்பாசம் - 1974

37அவளும் பெண்தானே - 1974

38காரோட்டிக் கண்ணன் - 1975

39ஆயிரத்தில் ஒருத்தி - 1975

40கஸ்தூரி விஜயம் - 1975

41தேன் சிந்துதே வானம் - 1975

42எல்லோரும் நல்லவரே - 1975

43ஏழைக்கும் காலம் வரும் - 1975

44உங்க வீட்டுக் கல்யாணம் - 1975

45கணவன் மனைவி - 1976

46பணக்காரப் பெண் - 1976

47அதிர்ஷ்டம் அழைக்கிறது - 1976

48ஆசை 60 நாள் - 1976/h3>

49ஜானகி சபதம் - 1976

50மிட்டாய் மம்மி - 1976

51நல்ல பெண்மணி - 1976

52அன்று சிந்திய ரத்தம் - 1977

53சொந்தமடி நீ எனக்கு - 1977

54தூண்டில் மீன் - 1977

55ஒருவனுக்கு ஒருத்தி - 1977

56சக்கரவர்த்தி - 1977

57மக்கள் குரல் - 1978

58அன்னபூரணி - 1978

59சதுரங்கம் - 1978

60இவள் ஒரு சீதை - 1978

61உனக்கும் வாழ்வு வரும் - 1978

62மங்கல நாயகி - 1980

63நாடகமே உலகம் - 1979

64இணைந்த துருவங்கள் - 1980

65காலம் ஒருநாள் மாறும் - 1981

66கண்ணாடி - 1981

67அவள் ஒரு காவியம் - 1983

68சங்கரி - 1984

69மலரும் நினைவுகள் - 1986

70மீண்டும் மகான் - 1987



பாடல்கள்

வி குமார் இசையமைப்பில் வந்த தமிழ் திரையிசைப்பாடல்களில் சில

S.No. பாடல் படம் பாடகர் கவிஞர்
1 புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஆயிரம் பொய் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
2 உனைப் பார்க்க வேண்டும் பழக வேண்டும் அன்னபூரணி கே ஜே ஏசுதாஸ் வாலி
3 ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது அரங்கேற்றம் பி சுசிலா கண்ணதாசன்
4 மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்க்கையில் முன்னேற்றம் அரங்கேற்றம் பி சுசிலா கண்ணதாசன்
5 என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள அதிர்ஷ்டம் அழைக்கிறது டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா வாலி
6 திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள் மிட்டாய் மம்மி டி எம் சௌந்தர்ராஜன், பிசுசிலா கண்ணதாசன்
7 களீர் களீர் என்று தேவதை எஸ் ஜானகி நேதாஜி
8 படைத்தானே பிரம்ம தேவன் எல்லோரும் நல்லவரே எஸ் பி பாலசுப்ரமணியம் புலமைபித்தன்
9 பகை கொண்ட உள்ளம் எல்லோரும் நல்லவரே கே ஜே ஏசுதாஸ் புலமைபித்தன்
10 சிவப்பு கல்லு மூக்குத்தி எல்லோரும் நல்லவரே டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா புலமைபித்தன்
11 ஏம்மா கண்ணு மாமா பொண்ணு எல்லோரும் நல்லவரே எஸ் பி பாலசுப்;ரமணியம், எஸ் ஜானகி புலமைபித்தன்
12 அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா எதிர்நீச்சல் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா வாலி
13 தாமரைக் கன்னங்கள் எதிர்நீச்சல் பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசிலா வாலி
14 வெற்றி வேண்டுமா போட்;;டுப் பாரடா எதிர்நீச்சல் சீர்காழி எஸ் கோவிந்தராஜன் , வாலி கே பாலசந்தர்
15 சேதி கேட்டோ சேதி கேட்டோ எதிர்நீச்சல் எஸ் சி கிருஷ்ணன், பி சுசிலா, கே ஜமுனாராணி வாலி
16 ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ஏழைக்கும் காலம் வரும் எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
17 புன்னகை மன்னன் பூவழி கண்ணன் இரு கோடுகள் பி சுசிலா, கே ஜமுனாராணி கண்ணதாசன்
18 நான் ஒரு குமாஸ்தா இரு கோடுகள் டி எம் சௌந்தர்ராஜன் வாலி
19 பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு இவள் ஒரு சீதை எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
20 இளமைக் கோவில் ஒன்று ஜானகி சபதம் கே ஜே ஏசுதாஸ் கே ஸ்வர்ணா
21 உன்னை நெனச்சா இனிக்குது ஜானகி சபதம் டி எம் சௌந்தர்ராஜன் பி சுசிலா
22 பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு கஸ்தூரி விஜயம் பி சுசிலா கண்ணதாசன்
23 ஒரு நாள் யாரோ என்ன பாடல் மேஜர் சந்திரகாந்த் பி சுசிலா வாலி
24 நேற்று நீ சின்ன பப்பா மேஜர் சந்திரகாந்த் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா வாலி
25 கல்யாண சாப்பாடு போடவா மேஜர் சந்திரகாந்த் டி எம் சௌந்தர்ராஜன் வாலி
26 வஞ்சி சிட்டு நெஞ்சைத் தொட்டு மக்கள் குரல் டி எம் சௌந்தர்ராஜன், கே ஸ்வர்ணா புலமைபித்தன்
27 விண்ணுக்கு மேலாடை நாணல் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா ஆலங்குடி சோமு
28 என்னதான் பாடுவது நான் எப்படித்தான் ஆடுவது நாணல் பி சுசிலா ஆலங்குடி சோமு
29 இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் நல்ல பெண்மணி கே ஜே ஏசுதாஸ், கே ஸ்வர்ணா புலமைபித்தன்
30 கன்னி நதியோரம் நீர்க்குமிழி டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா ஆலங்குடி சோமு
31 ஆடி அடங்கும் வாழ்க்கையடா நீர்க்குமிழி சீர்காழி எஸ் கோவிந்தராஜன் சுரதா
32 விளக்கே நீ கொண்ட ஒளி நானே நிறைகுடம் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
33 கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் நிறைகுடம் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
34 நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நூற்றுக்கு நூறு பி சுசிலா வாலி
35 உங்களில் ஒருவன் நான் நூற்றுக்கு நூறு டி எம் சௌந்தர்ராஜன் வாலி
36 கண்ணெல்லாம் உன் வண்ணம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஸ்வர்ணா வாலி
37 நாள் நல்ல நாள் பணக்காரப் பெண் டி எம் சௌந்தர்ராஜன், வாணிஜெயராம் புலமைபித்தன்
38 வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு பத்தாம்பசலி டி எம் சௌந்தர்ராஜன், கே ஸ்வர்ணா ஆலங்குடி சோமு
39 நீ நினைத்த நேரம் எல்லாம் வரவேண்டுமோ பெண்ணை நம்புங்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா வாலி
40 நல்ல நாள் பார்க்கவோ பொம்மலாட்டம் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா வாலி
41 மயக்கத்தை தந்தவன் யாரடி பொம்மலாட்டம் பி சுசிலா வாலி
42 வா வா வாத்தியாரே ஊட்டாண்டே பொம்மலாட்டம் மனோரமா வாலி
43 தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ராஜநாகம் எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா வாலி
44 மதனோற்சவம் ரதியோடுதான் சதுரங்கம் எஸ் பி பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் வாலி
45 எழுதாத பாடல் ஒன்று தேன் சிந்துதே வானம் டி எம் சௌந்தர்ராஜன், கே ஸ்வர்ணா கண்ணதாசன்
46 உன்னிடம் மயங்குகிறேன் தேன் சிந்துதே வானம் கே ஜே ஏசுதாஸ் வாலி
47 வாழ்வில் சௌபாக்கியம் வந்தது தூண்டில் மீன் எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசிலா வாலி
48 என்னோடு என்னென்னவோ ரகசியம் தூண்டில் மீன் பி ஜெயசந்திரன், கே ஸ்வர்ணா வாலி
49 முள்ளுக்கு ரோஜா சொந்தம் வெகுளிப்பெண் பி சுசிலா கண்ணதாசன்
Advertisement
50 எங்கெல்லாம் வலையோசை கேட்கின்றதோ வெகுளிப்பெண் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
51 காதோடு தான் நான் பாடுவேன் வெள்ளிவிழா எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
52 கை நிறைய சோழி வெள்ளிவிழா பி சுசிலா, எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
53 நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் வெள்ளிவிழா பி சுசிலா கண்ணதாசன்
54 ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வெள்ளிவிழா டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
55 உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வெள்ளிவிழா எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன்
56 உன்னைத் தொட்ட காற்று வந்து என்னை தொட்டது நவக்கிரஹம் பி சுசிலா, எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
57 பெண்ணல்ல நீ ஒரு பொம்மை சொந்தமடி நீ எனக்கு பி ஜெயசந்திரன், பி சுசிலா
58 நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே எல்லாம் அவளே பி ஜெயசந்திரன்,
59 உனைப் பார்க்க வேண்டும் பழக வேண்டும் அன்னபூரணி கே ஜே ஏசுதாஸ்,
60 சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் நாடகமே உலகம் எஸ் பி பாலசுப்ரமணியம், வாணிஜெயராம்