சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கொரோனா ஊரடங்கு காலம், அதற்கு முந்தைய மாதங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள தற்போது எளிமையாக நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகைகளின் திருமணங்கள் கடந்த 2 மாத்தில் மட்டும் நடந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி ராஜசேகர் திருமணமும் நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் வைஷ்ணவி. அவரது வெள்ளந்தி சிரிப்புக்கும், வெடி பேச்சுக்கும் தனி ரசிகர் வட்டமே உள்ளது. வைஷ்ணவி சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
தற்போது இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ள. இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கிறார் வைஷ்ணவி. வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.