சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டா. இவர் நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமான படத்தில் அவரது ஜோடியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், அம்பிகா, ராதாரவி, பானுசந்தர் உள்பட பலர் நடித்தனர். சுந்தர்.சி உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்கி இருந்தார். படத்தின் பணிகள் முடிவடைந்தும் படம் இன்னும் வெளிவரவில்லை.
இதனால், பூவே உனக்ககாக என்ற தொடர் மூலம் சின்னத்தரையில் அறிமுகமானார் ஜோவிட்டா. சில மாதங்களே நடித்து வந்த நிலையில் தற்போது அந்த தொடரில் இருந்து விலகுகிறார். இந்த தவலை அவர் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தெரிவித்து விட்டார். இதனால் தொடரின் கதையில் சில மாற்றங்கள் செய்த அவரது கேரக்டரை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
ஜோவிட்டாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அவர் விலகுவதாகவும், பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதால் விலகுவதாகவும் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. எது உண்மை என்பது விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.