கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் |
மிமிக்ரியை அடிப்படையாக வைத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் சினிமா நட்சத்திரங்களாகி உள்ளனர். ஏற்கெனவே லட்சுமி ராமகிருஷ்ணனை கடுமையாக கிண்டல் செய்த இந்த நிகழ்ச்சி கடும் கண்டனத்தை சந்தித்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு பற்றியும், அவரது வசன உச்சரிப்பு, முகபாவங்கள் பற்றியும் கிண்டல் செய்து ஒரு எபிசோட் ஒளிபரப்பானது.
இந்த எபிசோட் வைரலானதோடு சிவாஜி குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. நடிகர் பிரபு, விஜய் டி.வி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்தார். அதேபோல சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதை தொடர்ந்து இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள விஜய் டி.வி. இனி இதுபோன்று நடக்காது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளது.