Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பெண்கள் தீண்டத் தகாதவர்களா?: நக்ஷத்திரா கேள்வி

10 நவ, 2020 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Nakshathra-speaks-about-women-menstruation

தமிழ் சின்னத்திரையுலகின் நட்சத்திர தொகுப்பாளினி நக்ஷத்ரா நாகேஷ். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் இப்போது சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார். "பீரியட்ஸ் பிரச்சினை இருப்பதாலேயே பெண்கள் தீண்டத் தகாதவர்களா?" என்று கேட்டு நக்ஷத்திரா வெளியிட்டுள்ள வீடியோ டிரண்டாகி வருகிறது.

அதில் அவர் பேசியிருப்பதாவது: வீட்டில் பெண் ஒருவர் முதல் முறையாக பீரியட்ஸ் ஏற்படும்போது அதை மிகப்பெரிய கொண்டாட்டமாக கருதி ஊரைக்கூட்டி தடபுடலாக திருவிழா நடத்துகிறோம், ஆனால் அடுத்த மாதமே பீரியட்ஸ் என்றால் அதை ஒரு தீண்டத்தகாத செயலாகக் கருதி பெண்களை கிச்சனுக்குள் செல்ல கூடாது, பூஜை அறைக்குள் செல்ல கூடாது என்ற கட்டுப்பாடுகள் இன்றளவும் பல வீடுகளில் இருந்து வருகிறது.

இது மிகவும் கொடுமையான விஷயம், இதை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். எனது வீட்டில் இது போன்ற செயல்கள் இதுவரை நடந்ததில்லை, இங்கு பீரியட்ஸ் இல்லை என்றால் நீங்களும் இல்லை நானும் இல்லை. குழந்தை பிறப்பதற்கு பீரியட்ஸ் என்பது மிக முக்கியமான காரணமாகும். பீரியட்ஸ் இல்லை என்றால் அவ்வுலகில் மனிதர்களே இருந்திருக்க முடியாது.

பீரியட்ஸ் என்பது ஒரு தீண்டத்தகாத செயல் ஒன்றும் இல்லை இது ஒரு இயற்கை நிகழ்வு. உங்கள் வீட்டில் இருக்கும் பெண்மணிகளின் பீரியட்ஸைக் கொண்டாடுங்கள் அதை அருவருப்பாக பார்க்காதீர்கள் .

இவ்வாறு நக்ஷத்திரா பேசியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கம்: கதறி அழுத ஜனனிசெம்பருத்தி சீரியலில் இருந்து ... ''நாங்க ரொம்ப பிஸி, வானம் கொட்டட்டும், எனை நோக்கி பாயும் தோட்டா'' - டிவியில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள் ''நாங்க ரொம்ப பிஸி, வானம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vidhuran - chennai,இந்தியா
10 நவ, 2020 - 21:28 Report Abuse
vidhuran இதெயெல்லாம் பொதுவெளியில் சொல்லித்தான் பெண்ணுரிமையை நிலைநாட்டணுமா? பீரியட்ஸ் வந்தால் அதை உங்கள் வீட்டுக்காரர்களிடம் சொல்லி புரியவைக்காமல் ஊருக்கெல்லாம் சொல்லி என்ன பயன்? உங்கள் பெயரை பத்திரிகைகளில் வரவேண்டும் என்பது மட்டும் தான் உங்கள் எண்ணம் போலிருக்கிறது. இந்த விஷயத்திற்கெல்லாம் பழைய எண்ணங்கள் உடையவர்களை தற்கால இளைஞர்கள் அறிவுபூர்வமாக விளக்கி மாற்றவேண்டும் தவிர, பிரபலங்களின் விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in