அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாகவே விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதேசமயம் கன்டென்ட் என்கிற பெயரில், பிக்பாஸ் வீட்டில் சில அநாகரிகமான, விதிமுறை மீறல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.. பொதுவாகவே சனி, ஞாயிறுகளில் கமல் வரும்போது அந்தந்த வாரங்களில் நடந்த தவறுகள் குறித்து கண்டிப்பதை முன்பு வழக்கமாகக் கொண்டிருந்தார்.. குறிப்பாக நடப்பு அரசியலை மையப்படுத்தி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளை அதனுடன் தொடர்புபடுத்தி தனது அரசியல் கருத்துக்களையும் பூடகமாக தெரிவிக்க கமல் தயங்கியதில்லை.
ஆனால் சில கேள்விகளை கமல் எழுப்புவார் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்திருந்தது, இந்த வாரம் அந்த விஷயத்தை பற்றி அவர் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்று விட்டது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில், பாலாஜி, சம்யுக்தா, சோம் மூவரும் அதிக அளவில் பந்துகளை சேகரிக்கும் போட்டியில் ஈடுபட்டனர்.. சம்யுக்தா, சோம் இருவரும் முழு முனைப்புடன் அந்த போட்டியில் ஈடுபட்டாலும், பாலா பெயரளவுக்கு சில பந்துகளை மட்டும் சேகரித்தவர், அதையும் சம்யுக்தாவின் கூடையில் சேர்த்து போட்டு அவர் அதிக எண்ணிக்கையிலான பந்துகளை பெறுவதற்கு உதவி செய்தார்.
அதே சமயம் தனிப்பட்ட எண்ணிக்கையில் பார்த்தால், சோம் தான் அதிக அளவிலான பந்துகளை சேகரித்து தலைவர் பதவிக்கான தகுதியை பெற்றிருந்தார். ஆனால் பாலாவின் உதவியால் சம்யுக்தா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற போட்டியாளர்களும் இதுகுறித்து பெரிதாக கேள்வி எழுப்பவில்லை.. சரி, பிக்பாஸாவது அதை எதிர்ப்பார் அல்லது விமர்சிப்பார் என்று எதிர்பார்த்தால் அவரும் சம்யுக்தாவின் வெற்றியை உறுதி செய்தார்.
ஆனால் பார்வையாளர்கள் மத்தியில் இது நேர்மையில்லாத தேர்வாகவே கருதப்பட்டது. இதுபற்றி கமல் நிச்சயமாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசியலில், தங்களை தவிர வேறு ஒரு தலைமைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக எதிரெதிர் கோஷ்டியாக இருந்தவர்கள் தங்களிடமிருந்த எம்எல்ஏக்களை ஒன்று சேர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர்.. இதை ஒரு அரசியல்வாதியாக அப்போது கமல் கண்டித்திருந்தார்.. கிண்டலடிக்கவும் செய்தார்.
ஆனால் தற்போது அதே போன்ற ஒரு நிகழ்வு தான், பிக்பாஸ் விளையாட்டுப் போட்டியிலும் நடந்திருக்கிறது. அந்த போட்டியின் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சிக்க விட்டாலும் கூட, குறைந்தபட்சம் சம்யுக்தாவிடம் இப்படி முறையில்லாமல் விதிமீறி, குறுக்கு வழியில் கிடைத்த உதவியை பெற்றது எந்த வகையில் நியாயம் என்றோ, அப்படி விதிமீறி பாலா சம்யுக்தாவுக்கு உதவி செய்ததை கண்டும், அது தவறு என்று சோம் ஏன் தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்றோ, கமல் கேள்வி எழுப்பவோ இல்லை.
கமல் நிச்சயமாக இந்த இடத்தில் நடப்பு அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கவும் கிண்டலடிக்கவும் கூட, இதை பயன்படுத்தி, அப்படியே பாலா சம்யுக்தா இருவரின் தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்வார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் கடந்து விட்டார் கமல்.. ஒருவேளை பிக்பாஸே, சம்யுக்தா தான் தலைவர் என தீர்ப்பு சொல்லி விட்டதால், தேவையில்லாமல் அதை எதிர்த்து எதற்காக பேசுவானேன் என கமல் நினைத்து விட்டாரோ என்னவோ..?