ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
விஜய் டி.வியின் நட்சத்திர தொகுப்பாளினி பாவனா. அவ்வப்போது இசை ஆல்பங்களையும் வெளியிடுவார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் தற்போது துபாயில் நடந்து வருகிறது. இதனால் துபாயில் தங்கி இருந்து பணியாற்றி வந்தார் பாவனா.
இந்த நிலையில் பாவானாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வர்ணணையாளர் பொறுப்பில் இருந்து விலகி இந்தியா திரும்பி விட்டார் பாவனா.
இதுகுறித்து டுவிட்டரில், ''தனிப்பட்ட காரணங்களுக்காக கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து விலகுகிறேன். என்னுடைய பெற்றோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, நான் சென்னையில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்'' என பாவனா தெரிவித்துள்ளார்.