ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை |
விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம் திரைப்பட நடிகர் ஆனவர்கள் பலர். சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி கடைசியாக வந்த தினா வரைக்கும் பெரிய பட்டியல் இருக்கிறது. இவர்களில் ஒருவர் சரத். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் தினாவுடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் இணையத்தில் வைரல் ஆனவை. மொட்டை ராஜேந்திரன் கெட்அப்பில் இவர் நடித்த காட்சிகள் எப்போது பார்த்தாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கும். சரத் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சரத், கிருத்திகா என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு இரு குடும்பமும் பச்சை கொடி காட்டிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பிரச்சினை காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரத், கிருத்திகா திருமணம் எளிமையாக நடந்தது. தற்போது தம்பதிகளுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.