5 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தாண்டு வெளியாகும் ‛ஆடுஜீவிதம்' | பிரபல பின்னணி பாடகரின் தந்தை வீட்டில் 72 லட்சம் திருட்டு | மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? |
மலையாள திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக சில வருடங்கள் முன்பு வரை பவனி வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி.. அதன்பிறகு ஓரிரு படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர், சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் இருக்கிற படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார். தற்போது பிரித்விராஜ் நடித்துவரும் கடுவா படத்தின் கதையும் இந்தப்படத்தின் கதையும் ஒன்றுதான் என்கிற பிரச்சனை கிளம்பி, விஷயம் நீதிமன்றம் வரை சென்றது. அதனால் சுரேஷ்கோபியின் படப்பிடிப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம். இது ஒருபக்கம் இருக்க, தற்போது விஜயதசமியை முன்னிட்டு இந்தப்படத்திற்கு 'ஒட்ட கொம்பன்' (ஒத்த கொம்பன்) என பெயர் சூட்டப்பட்டு இன்று டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.