பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 8ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் திருமணம் தொடர் முடிவுக்கு வருகிறது. நாளை மறுநாள் (16ந் தேதி) ஒளிபரப்பாகும் 480வது எபிசோட்டுடன் இந்த தொடர் நிறுத்தப்படுகிறது.
விருப்பமின்றி நடந்த ஒரு திருமணம் எப்படி விருப்பமானதாக மாறுகிறது என்பது தான் தொடரின் ஒன்லைன் ஸ்டோரி. இதில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த சித்துவும், ஸ்ரேயாயும் நிஜ வாழ்க்கையிலும் இணைய மாட்டார்களா என பார்வையாளர்களை ஏங்க வைத்த தொடர்.
இதில் சித்து, ஸ்ரேயாவுடன் ஷெரின், இந்துமதி, வேதா தாஸ், சிவலிங்கம் பாபு, ப்ரீத்தி சர்மா, தீபக் குமார், ரெய்சா, தினா, பிரிட்டோ, மனோஜ்குமார், கிருபா, ஹரி கிருஷ்ணன், ரேகா, மைத்ரேயன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சூரியும், ஊர்வசியும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்கள். கோபிகாந்த் இயக்கி இருந்தார்.