நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
பெரிய திரை நடிகர் சங்கம் போன்றே சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் அதிகார சண்டை தலைவிரித்தாடுகிறது. கடைசியாக நடந்த தேர்தலில் ரவிவர்மா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.
மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழா, சங்கத்திற்கு வந்த கொரோனா நிவாரண நிதி, நிவாரண பொருட்களில் ரவிவர்மா பெரிய அளவில் மோசடி செய்து விட்டார் என்று கூறி எதிர்தரப்பினர் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மனோபாலாவை தலைவராக நியமித்தனர்.
இந்த நிலையில் ரவிவர்மா விடுத்துள்ள அறிக்கையில், "என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பொதுக் குழுவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பதவி நீக்கம் செய்வது செல்லாது. அதனால் நானே தலைவராக நீடிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரங்கால் வேலையின்றி தவிக்கும் சங்க உறுப்பினர்கள், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நடக்கும் இந்த அதிகாரச் சண்டையால் மிகவும் மனம் வெறுத்துப்போய் இருக்கிறார்கள்.