கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக ரவிவர்மா கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழா, கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றில் அவர் பெரிய அளவில் முறைகேடு செய்ததாக மற்ற நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இதனால் சங்க விதிகளின் படி செயற்குழுவை கூட்டி அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கினர்.
என்றாலும் ரவிவர்மா அலுவலகத்திற்கு வந்து தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக மற்ற நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சங்கத்தை பூட்டிச் சென்றனர். நீதிமன்றம் யாரிடம் சாவியை கொடுக்க சொல்கிறதோ அவர்களிடம் கொடுப்போம் என்று போலீசார் கூறிவிட்டனர். சின்னத்திரை சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடிகர் சங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த சங்கத்தின் அவசர செயற்குழுவில் நடிகர் மனோபாலா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை பொதுச் செயலாளர் ரிஷி ஜெயந்த் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து ரவிவர்மா நீதிமன்றம் செல்வார் என்று தெரிகிறது.