Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தோழியின் தற்கொலை வழக்கில்: லட்சுமி புரமோத்துக்கு முன் ஜாமீன்

30 செப், 2020 - 17:13 IST
எழுத்தின் அளவு:
FRIENDS-SUICIDE-CASE-LAKSHMI-GETS-PRE-BAIL

பிரபல முன்னணி மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை லட்சுமி புரமோத். பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி உள்பட பல தொடர்களில் நடித்தார். இவரது தோழி ரம்சி. இவரும் லட்சுமி கணவரின் தம்பி ஹாரிசும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் ஹாரிசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க லட்சுமி புரமோத் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் ரம்சி தற்கொலை செய்து கொண்டார்.


இந்த தற்கொலை வழக்கில் காதலன் ஹாரிசுடன், லட்சுமி புரமோத்தும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஹாரிசுக்கு வேறொரு திருணமம் செய்து வைக்க முயற்சி. ரம்சியின் கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் லட்சுமி புரமோத் மீது வைக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் லட்சுமி புரமோத் தலைமறைவானார். அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் கொல்லம் செஷன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் லட்சுமி புரமோத் தற்போது தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அவர் நடிக்காவிட்டால் மொத்த படப்பிடிப்பும் நின்று விடும் இதனால் பலர் வேலை வாய்ப்பு இழப்பார்கள். லட்சுமி போலீசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். இதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அக்டோபர் 6ந் தேதி வரை லட்சுமியை கைது செய்யக்கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கியது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் மியூசிக்: உதயமாகிறது புதிய இசை சேனல்விஜய் மியூசிக்: உதயமாகிறது புதிய இசை ... நட்சத்திர கலை விழாவில் மோசடி: சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் மீது சரமாரி புகார் நட்சத்திர கலை விழாவில் மோசடி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in