பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
ராஜா ராணி 2, மௌனராகம் 2 என விரைவில் இரண்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டிவி. இது தவிர பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியும் ஆரம்பமாக இருக்கிறது. இதற்கான புரோமோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில் மௌனராகம் மற்றும் ஆயுத எழுத்து என இரண்டு சீரியல்கள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் மௌனராகம் சீரியலுக்கு விரைவில் இரண்டாம் பாகம் வர உள்ளது. ஆனால் ஆயுத எழுத்து ஒரு தெளிவும் இல்லாமல் ஏன் இப்படி குழப்பமாக முடித்து விட்டனர் என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் அந்த சீரியலில் நாயகியாக நடித்த சரண்யா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பலரும் சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து என்னிடம் கேள்வி கேட்கின்றனர். ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று உண்மையில் எனக்கே தெரியாது. சரியான காரணம் தெரிய வரும்போது அதை நிச்சயம் ரசிகர்களுக்கு அறிவிப்பேன். மேலும் ஒரு நல்ல தொடரில் மீண்டும் உங்களை சந்திப்பேன்" என சரண்யா தெரிவித்துள்ளார்.