எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… |
நட்சத்திர இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் கலக்கியவர் சாய் சரண். டைட்டில்களை வென்றதோடு, அதன் பலனாய் திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்து இமான் இசையில் பல பாடல்களையும் பாடி உள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த சாய் சரணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. மணமகள் உறவுக்கார பெண்ணான நந்தினி என்கிற மீரா. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. கொரோனா காலம் என்பதால் உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
"சர்வவல்லமை கொண்ட இறைவனின் கிருபையாலும் என் தாயின் ஆசீர்வாதத்தாலும் நந்தினி என்கிற மீராவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, நெருங்கி நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அழைத்திருந்தேன். இன்றுள்ள சூழ்நிலையின் காரணமாக எல்லோரையும் அழைக்க முடியவில்லை. திருமணத்தின் போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார் சாய் சரண்.