ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. கார்த்திக் ராஜ், ஷாபனா, ப்ரியா ராமன், ஜனனி, பாரதா நாயுடு உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த அன்பு நேற்று முன்தினம் திடீரென காலமானார். அவரது இழப்பு செம்பருத்தி யூனிட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
செம்பருத்தி சீரியல் ஆரம்பத்தில் டிஆர்பியை பிடிக்க தடுமாறியபோது 100வது எபிசோடில் உள்ளே வந்தவர் அன்பு. அவரது கடின உழைப்பால் சீரியல் டிஆர்பி உயர்ந்ததால் அன்பு அனைவரின் அன்புக்கும் பாத்திரம் ஆனார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் பாரதா நாயுடு கண்ணீர்விட்டு அழுத வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: செம்பருத்தி ஒளிப்பதிவாளர் அன்பு காலமாகிவிட்டார் என்ற தகவல் எனக்கு இப்போதுதான் கிடைத்தது. எனது ஒன்றரை வருட செம்பருத்தி பயணத்தில் பல்வேறு அரசியலைச் சந்தித்தேன். உள்ளே பெரிய போர்க்களமே நடக்கும். அப்போது ரொம்ப தனியாக இருந்தேன். என்னை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்கள்.
அன்பு எப்போதுமே எனக்குப் பெரிய உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசியிருந்தேன். அவரைப் பற்றி இப்படியொரு செய்தி எதிர்பார்க்கவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர். கண்டிப்பாக நீ ஜெயிப்பாய், சாதிப்பதை மட்டுமே யோசி என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றி இருப்பவர்கள் யார் என்ன சொன்னாலும் யோசிக்காதே என்பார். மற்றவர்கள் உன்னைத் தடுக்க நினைக்கிறார்கள் என்றால் நீ ஏதோ சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுவார். அன்பு, உங்களை ரொம்பவே மிஸ் செய்வேன்.
இவ்வாறு பாரதா நாயுடு பேசியுள்ளார்.