விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. முதல் படமே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அப்படத்திற்குப் பின்னர் டிஷ்யூம், வல்லவன், கூடல்நகர் போன்ற படங்களில் நடித்தார்.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் குருவாயூரில் இவரது திருமணம் நடைபெற்றது. அப்போது சென்னை பெருவெள்ளத்தில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்ததால் தனது திருமண வரவேற்பை ரத்து செய்து விட்டு அந்தப் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த சந்தியா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் அவர் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். கொரோனா பிரச்சினையால் சினிமா படப்பிடிப்புகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. இதனால் பல நடிகைகளின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பி இருக்கிறது.