பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வித்யா பிரதீப், 'சைவம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், தடம், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள் படங்களில் நடித்தார்.
சின்னத்திரையில் நாயகி தொடரில் நடிகை விஜயலட்சுமி ஹீரோயினாக நடித்தார். அவர் சீரியலிலிருந்து திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக வித்யா பிரதீப் நடித்தார். கொரோனா பிரச்னையால் நாயகி சீரியல் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் துவங்கி உள்ளது. ஆனால் வித்யா நடிக்கவில்லை. மாறாக கிருஷ்ணா, நக்ஷத்ரா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். வித்யா இந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வித்யா கூறும்போது, "நாயகி சீரியலில் இருந்து நான் விலகவும் இல்லை. என்னை விலக்கவும் இல்லை. நான் நடித்து வந்த பகுதி முடிந்து விட்டது. தற்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன்" என்கிறார்.