Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டைட்டில் அதே.. ஆனால் புதிய கதைக்களம்!

28 ஜூலை, 2020 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Lot-of-changes-in-serial-after-corona-impact

படையப்பா படத்தில் வரும் 'மாப்பிள்ளை அவருதான்.. ஆனா அவரு போட்ருக்க சட்டை என்னோடது' காமெடி போல், கொரோனா ஊரடங்கால் பல சீரியல்களின் கதைகளில் மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சினை எப்போது தீரும் மீண்டும் எப்போது பழையபடி இயல்பு வாழ்க்கை திரும்பும் என மக்கள் காத்திருக்கின்றனர். இவர்களில் சீரியல் ரசிகர்களும் அடங்குவர். கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் எல்லா சேனல்களிலும் பழைய எபிசோட்களே ஒளிபரப்பப்பட்டு வந்தன.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சீரியல் படப்பிடிப்புகள் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பமாகின. இதனால் விரைவில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ஜூலை 27(நேற்று) முதல் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என அதில் கூறப்பட்டது. எனவே ஆர்வமாக தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்த பலருக்கு நேற்று ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனென்றால் கொரோனா பிரச்சினையால் சீரியலில் முன்னர் நடித்திருந்த பலர் நடிக்க மறுத்து விட்டதாலும், அதிக கூட்டம் சேர்த்து படப்பிடிப்பை நடத்த முடியாது என்பதாலும் பல சீரியல்களில் கதைக்களம் மாற்றப்பட்டிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் அதில் ஒன்று. அந்த சீரியலின் சிறப்பு அம்சமே அதில் நாயகன் டபுள் ஆக்சனில் நடித்திருந்தது தான். ஆனால் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் புதிய நாயகியாக ரக்ஷிதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இது அந்த சீரியல் ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இதே போல் இன்னொரு டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி, சித்தி 2 போன்ற சீரியல்களிலும் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன, பலர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
புதிய நாகினி அறிமுகம்புதிய நாகினி அறிமுகம் அஞ்சலி ராவ் தாய் ஆனார் அஞ்சலி ராவ் தாய் ஆனார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31 ஜூலை, 2020 - 13:33 Report Abuse
skv srinivasankrishnaveni இந்த நாமிருவர் நமக்கிருவர் ஆசையாபாக்களுக்கானதா ஒரு இழவும் புரியலே அணைச்சுப்போட்டு போயிட்டேன் பாரதிகண்ணம்மாளே வெண்பாவை நடிக்குது ஒரு முட்டைக்கண்ணி அதுநடிப்பும் எரிச்சலா இருக்கு பாரதி ஒரு டாக்டர் தானே அவனுக்கு எப்படி சந்தேகம் வரலாம் சீ கஸ்மாலம் னு அணைச்சுட்டேன்
Rate this:
LAX - Trichy,இந்தியா
29 ஜூலை, 2020 - 13:05 Report Abuse
LAX //அந்த சீரியலின் சிறப்பு அம்சமே அதில் நாயகன் டபுள் ஆக்சனில் நடித்திருந்தது தான். ஆனால் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் புதிய நாயகியாக ரக்ஷிதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இது அந்த சீரியல் ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.// - சிறப்பம்சம் டபுள் ஆக்ஷன் நாயகன் மாறலயே.. அப்புறம் என்ன பெரும் ஏமாற்றமடைய வைத்தது..? ..
Rate this:
28 ஜூலை, 2020 - 18:21 Report Abuse
ilaiyaraja muthu அது என்னய்யா இன்னொரு டிவி.... சன் டிவி னு சொல்ல மாட்டீரோ.....
Rate this:
RAJAVELU - Thiyagadurgam,இந்தியா
30 ஜூலை, 2020 - 12:48Report Abuse
RAJAVELUAthane adhu enna inoru TV?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in