Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சித்தி 2: இனி அவர்களுக்குப் பதில் இவர்கள் தான்!

19 ஜூலை, 2020 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Chithi-2-:-Artist-changed

கொரோனா ஊரடங்கால் மற்ற தொழில்களைப் போலவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட சீரியல் படப்பிடிப்புகள் அண்மையில் சில நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ள அரசு அனுமதித்தது. இதனால் மீண்டும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிதாக பதிவு செய்யப்பட்ட எபிசோட்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் பலர் படப்பிடிப்பில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சீரியல் கதாபாத்திரங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் ரசிகர்களைக் கவர, சுவாரஸ்யத்திற்காக புதிய கேரக்டர்கள் பல சீர்யல்களில் புகுத்தப்பட்டுள்ளன.

ராதிகாவின் சித்தி 2 சீரியலிலும் இது போன்ற மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. முன்பு சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு கணவராக நடிகர் பொன்வண்ணன் நடித்து வந்தார். இனி, அவருக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ராதிகாவின் இரண்டாவது மருமகளாக வந்த நிதிலா சுமனுக்கு பதிலாக வேறொருவரும், பொன்வண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சில்பாவிற்கு பதிலாக ஜெயலட்சுமியும் மாற்றம் செய்யப்பட்டு சித்தி 2 சீரியல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. கொரோனாவால் பலருடைய உடல் நிலை சூழலால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராதிகாவும் இதனை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சித்தி 2 தொடர்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாகும்” என ராதிகா தெரிவித்துள்ளார்.

மேலும் சித்தி 2 சீரியலில் முக்கிய வில்லியாக நடிக்க இருப்பதாக நடிகை மீரா கிருஷ்ணனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பிரச்னையால் சீரியலில் இருந்து விலகிய நடிகைகொரோனா பிரச்னையால் சீரியலில் ... புதிய நாகினி அறிமுகம் புதிய நாகினி அறிமுகம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22 ஜூலை, 2020 - 03:52 Report Abuse
J.V. Iyer டிவி சீரியல்கள் ஒழிந்தால் தான் கலாச்சாரம் வளரும். மனிதநேயம் வளரும். மக்கள் மூளையை மழுங்கச்செய்யும் சீரியல்கள். இதில் எந்த சீரியலும் விதிவிலக்கல்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in