பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர் நடிகர் ரஞ்சன் செகல். கிரைம் பேட்ரல், சம் தேரா சாத் மேரா, பவார், ரிஷான் செ பேடி பர்தா, குஷ்தக் தில், ஜனா கேயே கோஹா ராம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த இவர் சில பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த சரப்ஜித் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
36 வயதான ரஞ்சன் செகல் சண்டிகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.