Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அழகு சீரியல் திடீர் நிறுத்தம்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி

11 ஜூலை, 2020 - 18:04 IST
எழுத்தின் அளவு:
Actress-Shruti-Raj-shocks-about-Azhagu-serial-stopped

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் அழகு. 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். வெள்ளித்திரையில் இருந்து இந்த சீரியல் மூலமாகத்தான் ரேவதி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

கொரோனா ஊரடங்கால் மற்ற சீரியல்களைப் போலவே அழகு சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அழகு சீரியல் திடீர் என பாதியிலேயே நிறுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதனை அச்சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ருதியும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிறையப் பேர் அழகு சீரியலை நிறுத்திவிட்டார்களா அல்லது இப்போதைக்கு இல்லையா என்று கேட்கிறீர்கள். உண்மை என்னவென்று சொல்கிறேன். கடந்த மாதமே என்னை அழகு சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கரோனா அச்சுறுத்தலால் நான் செல்லவில்லை. ஏனென்றால் எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தில் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்று சீரியல் குழுவினருக்கும் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் சொல்லியிருந்தேன். அவர்களும் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதம் 8-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு என்று கேள்விப்பட்டேன்.

அழகு டீம் எல்லாம் இணைந்து ஒரு வாட்ஸ்-அப் குரூப்பில் இருக்கிறோம். என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென்று அழகு சீரியல் கைவிடப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை.

அழகு சுதாவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதாவுக்காக நிறைய சமூக வலைதளப் பக்கங்கள், வீடியோக்கள் எல்லாம் போட்டீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. அடுத்தடுத்து சீரியலுக்குச் செல்லும்போது இதே ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன்.

அழகு சீரியல் மூலம் ரேவதி மேடம் மற்றும் தலைவாசல் விஜய் சாருடன் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக அழகு குழுவினரை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என ஸ்ருதி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரன் வில்லன் திருமணம்ரன் வில்லன் திருமணம் இந்தி தொடர் நடிகர் ரஞ்சன் செகல் திடீர் மரணம் இந்தி தொடர் நடிகர் ரஞ்சன் செகல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Guhan - Tamil Nadu,இந்தியா
15 ஜூலை, 2020 - 21:42 Report Abuse
Guhan பாவம் மக்கள்,
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
12 ஜூலை, 2020 - 14:39 Report Abuse
Bhaskaran நிறைய தாய்மார்களுக்கு சாப்பாடுஇறங்காதே
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12 ஜூலை, 2020 - 07:37 Report Abuse
Mani . V அய்யய்யோ என்னய்யா இது தமிழக மக்களின் தலையில் இடியை இறக்கி வைத்துள்ளார்கள். இந்த சீரியல் நிறுத்தத்தால் இனி தமிழக மக்கள் எப்படி சுவாசிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள்?. ஐயகோ நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறதே. எத்தனை கோடிப் பேர் உயிரை விடப்போகிறார்களோ? தெரியவில்லையே.
Rate this:
11 ஜூலை, 2020 - 21:19 Report Abuse
rasheed நாட்டு முக்கியம் சேதி எல்லோரும் பயந்து இருக்கும் நேரம் இது தேவையா எல்லோரும் லாபம் பார்த்து விட்டார்கள் நிவாரணம் ஏதாவது கொடுத்தார் காலா இல்லை இண்ட் மாதிரி சேதி போட்டு எங்களுக்கு டென்ஷன் செய்யாதீர் ரஷீத்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in