Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீன் விற்கும் நடிகர்

04 ஜூலை, 2020 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Malayalam-actor-turn-as-fish-Seller

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது குறைந்த சம்பளத்தில், தினசரி சம்பளத்தில் பணியாற்றும் நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. கடை நடத்துதல், ஆட்டோ ஓட்டுதல், காய்கறி வியாபாரம் என அவர்கள் மாற்று வேலைகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் மலையாள படங்களில் நடித்த வந்த சுதீஷ் அன்சேரி மீன் வியாபாரம் செய்கிறார்.

தனஹா உள்ளிட்ட பல மலையாள படங்களில், சிறு சிறு குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் சுதீஷ் அன்சேரி. இவர் ஓவிய ஆசிரியராகவும், மிமிக்கிரி மற்றும் நாட்டுப்புற பாடல் கலைஞராகவும் இருந்தார். நடிக்க வாய்ப்பு இல்லாத காலத்தில் ஓவிய ஆசிரியராகவும், மேடையில் மிமிக்ரி நிகழ்ச்சியும் நடத்தினார். இவரது ஆடியோ கேசட்டுகள் கேரளாவில் மிகவும் பிரபலம்

கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்ட நிலையில் தற்போது மீன் வியாபாரத்துக்கு வந்த விட்டார் அன்சேரி. மம்முட்டி போலவும், மோகன்லால் போலவு மிமிக்ரி செய்து வாடிக்கையாளர்களை அழைப்பதால் மீன் வியாபாரமும் நன்றாக நடக்கிறது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் காலமானார்கன்னட காமெடி நடிகர் ராஜகோபால் ... சினிமாவுக்கு குட்பை.. சீரியலுக்குள் நுழைந்த பிரம்மானந்தம் சினிமாவுக்கு குட்பை.. சீரியலுக்குள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R MURALIDHARAN - coimbatore,இந்தியா
08 ஜூலை, 2020 - 10:52 Report Abuse
R MURALIDHARAN இவர் ஏற்கனவே மீன் வியாபாரம் செய்துவிட்டுத்தான் சின்னத்திரைக்கு வந்தார். தொழில் இல்லாததால் மீண்டும் பழைய தொழிலுக்கே சென்று விட்டார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in