Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

உள்ளுர் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: எலிசபெத் சுராஜ் வேண்டுகோள்

19 மே, 2020 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Give-oppurtunity-to-local-actors-says-actress-elizabeth-suraj

கொரோனா ஊரடங்கு காலத்தில் சின்னத்திரை, பெரிய திரையில் பணிபுரியம் தினக்கூலி பணியாளர்களுக்கு நடிகர்கள் கோடி கணக்கில் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அதேபோல உள்ளூர் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார் சின்னத்திரை நடிகை எலிசபெத் சுராஜ்.

பிரியமானவள், ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், சந்திரலேகா, அனுபல்லவி, கனா காணும் காலங்கள், கல்யாணம் முதல் காதல் வரை உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான், கடம்பன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளர்.

அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: தமிழ் திரைப்பட நடிகர்கள் , இயக்குனர்கள் பலர் சம்பளத்தை குறைத்து கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். நல்ல விஷயம். சந்தோஷம். எனக்கும் சொல்ல ஆசைதான். ஆனால் எனக்கு தான் வேலையே இல்லையே எப்படிச் சொல்வது.

வேலை இல்லாமல் வீட்டிலிருக்கும்போது ஏற்பட்ட வலியை உணர முடிந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும், நடிகைகளும் நடிப்பு மட்டுமே தொழிலாய் கொண்டு வருடக் கணக்காய் வேலை இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களை பற்றி இப்போதாவது சிந்திக்க வேண்டும்.

குடும்பம் நடத்த, பிள்ளைகளை படிக்க வைக்க படும் வலியை உணர்ந்து இனியாவது வெளி மாநில நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கும் வாய்ப்பை இங்கிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு எலிசெபத் எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா குறித்து விக்கி பேட்டிஎங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா ... சரிகமப சிறப்பு நிகழ்ச்சி: 24ந் தேதி ஒளிபரப்பாகிறது சரிகமப சிறப்பு நிகழ்ச்சி: 24ந் தேதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
21 மே, 2020 - 22:51 Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்த நடிகையின் வேண்டுகோளின் நியாயம் இவரது குறுகிய எண்ணத்தால் அடிபட்டுப்போகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in