Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன்

16 மே, 2020 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Makeup-man-helps-actress

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர் சோனால் வெங்குர்லேகர். ஏ தேரி கலியான் தொடர் மூலம் புகழ் பெற்ற அவர் யே வாதா ராகா, சாஸ்திரி சிஸ்டர்ஸ், தேவ், லால் இஷாக், யே தேறி கலியான், அலெக்மி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

சோனால் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளார். படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பெரும் பணப் பிரச்சினையில் சிக்கியுள்ளார். சாப்பாட்டு செலவுக்கு வழியில்லாமல் தவித்த அவருக்கு அவரது மேக்அப் மேன் 15 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார். இதுகுறித்து சோனால் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

எனக்கு பணம் தர வேண்டிய தயாரிப்பாளர் நீண்ட காலமாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் அடுத்த மாத செலவுக்கு காசு இல்லை என்று என் மேக்கப் மேனிடம் கூறினேன். அவரின் மனைவி வேறு கர்ப்பமாக உள்ளார், அதனால் பல செலவுகள் இருக்குமே என்று எனக்கு அவரை நினைத்து கவலையாக இருந்தது.

என் மேக்கப் மேன் எனக்கு அனுப்பிய மெசேஜை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மெசேஜை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. "மேடம் என்னிடம் ரூ. 15 ஆயிரம் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அதை பெற்றுக் கொள்ளுங்கள். என் மனைவிக்கு பிரசவம் ஆகும் நேரம் திருப்பிக் கொடுத்தால் போதும்" என்று அவர் தெரிவித்தார்.

எனக்கு லட்சக் கணக்கில் பணம் தர வேண்டியவர்கள் நான் போன் செய்தால் அட்டென்ட் செய்வது இல்லை. மேலும் என் எண்ணை பிளாக் செய்வதுடன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எனக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.என் மேக்கப் மேன் பங்கஜ் குப்தாவை என் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். அவர் கொடுத்த பணம் பெரிய விஷயம் அல்ல. அவர் என்னை பற்றி நினைத்தது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வெள்ளி விழா கண்ட அபிஷேக்வெள்ளி விழா கண்ட அபிஷேக் எங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா குறித்து விக்கி பேட்டி எங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Endrum Indian - Kolkata,இந்தியா
19 மே, 2020 - 16:58 Report Abuse
Endrum Indian என்ன நடிப்புடா சாமி ????லட்சம் லட்சமாக சம்பாத்தியமாம் பசியில் வாடுகின்றார்களாம் பணமில்லாமல் அப்புறம் என்ன காலையில் 2 தோசைக்கு பதிலாக ஒரு 10,௦௦௦ சாப்பிடுகிறீர்களா???/ ரூ 15,000 தருகின்றேன்???தரவில்லை???இதுக்கு இந்த டப்பா ட்வீட் வேறே. இந்த தோல் காமி பணம் பண்ணு தொழிலில் வெறும் விளம்பர டப்ப்பா அடிப்பதே இவர்கள் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் போலெ???????
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
20 மே, 2020 - 20:05Report Abuse
 Muruga VelWhat do you mean...
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 மே, 2020 - 16:11 Report Abuse
skv srinivasankrishnaveni எப்போதுமே பல பணக்காரனுகளுக்கு கோடீஸ்வராளாயிருந்தாலும்ம் முன்கையும் நீளாது முழங்கைவராது என்பது முதுமொழி தேங்காய் சீனுவாசன் போல பெரிய நடிகர்களெல்லாம் செக் வாங்கிண்டுட்டு வாங்கியேந்து பணம் எடுக்கமுடியாது தவிச்சாங்கம்மா அவர் சொன்னது திரும்பிவந்த செக்குகளை வச்சு பெரிய ரோடுலே தோரணமே கட்டலாம்னு
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
19 மே, 2020 - 07:17 Report Abuse
Bhaskaran பசிக்கொடுமை அறிந்துள்ளது தொழிலாளர்கள் மட்டுமே .மனிதாபிமானமும் அவர்களிடம் தான் உள்ளது ஒயிட் காலர் ஆசாமிகளிடம் சத்தியமாக கிடையாது
Rate this:
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
18 மே, 2020 - 08:30 Report Abuse
Naagarazan Ramaswamy மனிதாபிமானம் இன்னும் நாட்டில் இருக்கிறது. நம் நாடு கோராணியிலிருந்து விரைவில் மீண்டுவிடும். இறைவனை வேண்டுவோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in