பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' | 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை வழங்கிய ஆர்ஜே பாலாஜி | நடிகை மீனாவின் கணவர் காலமானார் | வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி சுரேஷா இது? | சூர்யாவின் 'வாடி வாசல்' மேலும் தள்ளிப் போகும் ? | ஒரே மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'சாம்ராட் பிரித்விராஜ்' | விஜய்யின் வாரிசு படம் குறித்து தமன் வெளியிட்ட அப்டேட் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் பாக்கியலட்சுமி. இது ஒரே கேரக்டரை சுற்றி நடக்கிற கதை. பாக்யலட்சுமி ஒரு குடும்பத் தலைவி. கணவன், மூன்று மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்.
பாக்யலட்சுமி அந்த குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கிறாள். ஆனால் அவளை குடும்ப உறுப்பினர்கள் சமையல்காரியாக, வேலைக்காரியாகத்தான் பார்க்கிறார்கள். பாசத்தோடு யாரும் பார்ப்பதில்லை. அவளுக்கு என்ன தேவை என்று யாரும் கவனிப்பதில்லை. செய்யும் வேலைக்கு நன்றி கூட தெரிவிப்பதில்லை.
ஆனால், அவள் வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத ஒரு அதிசயம் நடக்கிறது. அதுவரை கண்டு கொள்ளாதவர்கள் அவளை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். அவளது உழைப்பை, தியாகத்தை உணர ஆரம்பிக்கிறார்கள். அந்த அதிசயம் என்ன என்பதுதான் தொடரின் டுவிட்ஸ். பாக்யலட்சுமியாக சுசித்ரா நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர் தொடரை இயக்கிய சிவசேகர் இயக்குகிறார். மார்ச் 16ந் தேதி ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.