நடிகை மீனா கணவர் மறைவு : ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி | 'வாரிசு' தயாரிப்பாளருக்குப் பிறந்த ஆண் வாரிசு | மோகன்லாலின் அலோன் படமும் ஓடிடி ரிலீஸ் தான் | நடிகர் பூ ராமு மறைவு ; மம்முட்டி நெகிழ்ச்சி பதிவு | சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிஜுமேனன் | ரேவதிக்கு விருது : கொண்டாடி மகிழ்ந்த தோழிகள் | பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான் | பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை |
புகழ்பெற்ற மராட்டிய மொழி தொடர் துலா பஹ்ட் ரே. இதனை தற்போது நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் அனுவுக்கும், 40 வயதை கடந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூர்ய பிரகாசுக்கும் நடக்கும், காதல், கல்யாணம் தான் கதை.
இதில் சூர்யா பிரகாசாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். இவர் ரோஜாக்கூட்டம், ராமச்சந்திரா, இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். தர்சனா அசோகன் அனு கேரக்டரில் நடிக்கிறார். இவர் இந்த தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் (பிப்.24) முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.