Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மோனிகாவுக்கு அரசியல்வாதிகள் மிரட்டல்

21 பிப், 2020 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Threaten-to-Monica

முன்னணி சேனனில் செய்தி வாசிப்பின் கடைசியில் வரும் வானிலை அறிவிப்பின் மூலமே புகழ் பெற்றவர் மோனிகா. பல வருடங்கள் அந்த பணியை செய்து விட்டு அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். சில சீரியல்களிலும் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

திடீரென மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு வந்தார். தனக்கென ஒரு யூ டியூப் சேனலை உருவாக்கி அதில் அன்றாட நாட்டு நடப்புகளை விமர்சித்து வந்தார். இப்போது அதையும் நிறுத்தி விட்டார். அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாக சின்னத்திரை மற்றும் சமூக வலைத்தளத்திலிருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கும், தொகுப்புக்கும் இடைவெளிவிட்டேன். இப்போது மகன் வளர்ந்து விட்டதால் மனசுக்கு பிடித்த மாதிரி ஏதாவது செய்யலாமே என்று நாட்டு நடப்புகள் பற்றி பேசினேன். பலர் நான் பேசிய கருத்துக்கு பதில் கூறாமல், நான் பேசவே கூடாது என்றார்கள். பேசினால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றார்கள். பள்ளிக்கு சென்ற என் மகனை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இது உன் மகன்தானே என்றார்கள். அதாவது தொடர்ந்து பேசினால் மகனை ஏதாவது செய்வோம் என்கிற மிரட்டல் அது.

என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். என் குடும்பத்தினரும் என் பாதுகாப்பு கருதி அமைதியாக இருக்க சொன்னார்கள். அதற்காகத்ததான் இந்த இடைவெளி. தற்போது நானும் என் கணவரும் இணைந்து புதிய விஷயம் ஒன்றை செய்ய இருக்கிறோம். அதில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். என்கிறார் மோனிகா.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்: புதிய மாயாஜால தொடர்அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்: ... சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 சூப்பர் சிங்கர் ஜூனியர் 7

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

ராமதாசன் - chennai,இந்தியா
23 பிப், 2020 - 23:52 Report Abuse
ராமதாசன் இந்த பொண்ணு - மதம் மாற்ற கும்பலின் அடிமை. செய்தி வாசிக்கும் போது எப்படி எழுதி கொடுத்ததை படிச்சுதோ அதையே தான் பண்ணிச்சு - வித்தியாசம் இப்போ எழுதுவது மத மாற்றுபவர்கள
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23 பிப், 2020 - 00:15 Report Abuse
Ramesh R உண்மையை பேசுவது சாத்தன்களுக்கு பிடிக்காதே
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22 பிப், 2020 - 13:30 Report Abuse
Rafi கம்பீரமான கர்ஜனை, துணிவுடன் தன கருத்தை ஆலம்மாக தெரிவித்த தோரணையை கண்டு, சுதந்திரமாக கருத்து தெரிவித்த பலர் அடக்கு முறைக்கும், கூலிப்படைகள் மூலம் கொலை நிகழ்ச்சிகளும் நடக்கும் இக்காலத்தில் பாரதியின் இப்புதுமை பெண்ணிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட கூடுமே என்று நினைத்ததுண்டு. குடும்பத்தை அரவணைத்து செல்லும் கட்டுபாடுள்ள நிலையை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை ஒடுக்கி இருக்கின்றார்கள்.
Rate this:
Aravinth -  ( Posted via: Dinamalar Android App )
22 பிப், 2020 - 12:02 Report Abuse
Aravinth Thayee nee yaaru pavadai Thana?? nadunilai nu nenachu naan kooda konja naal follow panniten apparum than therinji unfollow pannen. Un Mari yethana per yebba pavam naanga. Pasuthol porthiya Puli nee
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22 பிப், 2020 - 02:25 Report Abuse
மலரின் மகள் இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவும், நமது கருத்துக்கள் வெளிவருவதை படித்து சந்தோசப்படுவதற்காகவும் புனைபெயரில் மலரில் தாராளமாக எழுத வாருங்கள். நல்லகருத்துக்கள் கூட சிலநேரங்களில் பிரச்சினைக்குரியதாகி விடக்கூடும் சோசியல் மீடியாக்களில். மலரில் இவற்றையெல்லாம் நன்கு அறிந்து எது நமக்கு பிரச்சினை தருமோ அதை அவர்கள் தடுத்தோ அல்லது அதை மேம்படுத்தி பிரச்சினை வராத வகையில் வெளியிடுகிறார்கள். மென்டோரிங் சிறப்பாக இருக்கிறது. தாராளமாக வாருங்கள் மலரில் கருத்தை பதிவதற்கு. வரவேற்பும் வாழ்த்துக்களும்.
Rate this:
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
22 பிப், 2020 - 09:40Report Abuse
Nallavan Nallavanஇவர் வணிகரீதியாகவும்,, தன்னுடைய பிரபல்யம் காரணமாக அதிகம் மக்களை அடையவும்தான் யூட்யூப் சேனல் துவங்குகிறார் ..... நீங்கள் சொல்லும் முறையால் அவருக்குப் பயனில்லை ........
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23 பிப், 2020 - 03:34Report Abuse
meenakshisundaramஅப்போ தர்ம காரியத்துக்கென ஓசி லே சேனல் யாரும் நடத்துறானான்னு சொல்லுப்பா தம்பி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in