Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியலிலும் வந்தாச்சு அரசியல் கதை

19 ஜன, 2020 - 14:16 IST
எழுத்தின் அளவு:
uyirae-serial-is-political-story

முன்பெல்லாம் சின்னத்திரை சீரியல் என்றால் குடும்ப கதைகள்தான். சென்னை ஸ்டூடியோவுக்குள்ளேயே எடுத்து முடித்து விடுவார்கள். ஆனால் விஜய் டி.வி தொடர்களின் களத்தை வெளியில் எடுத்துச் சென்றது. குறிப்பாக கிராமங்களுக்கு. தற்போது தொடர்கள் சினிமாவுக்கு நிகரான கதை, திரைக்கதை, தொழில்நுட்ப தரத்துடன் ஒளிபரப்பாக துவங்கி உள்ளது.


சினிமாவில் அதிகமாக அரசியல் கதைகள் வந்து கொண்டிருப்பதைபோல சின்னத்திரை சீரியல்களிலும் அரசியல் கதைகள் வரத் தொடங்கி விட்டது. கடந்த ஜனவரி 2ந் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் உயிர் தொடர் முழுக்க முழுக்க அரசியல் கதை. குறிப்பாக அம்மா மகளுக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல் கதை.


மதுரை சிம்மக்கல் கவுன்சிலரான வீரலக்ஷ்மி டெரரான அரசியல்வாதி. குடும்பத்தையும் கிராமத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். இவருக்கு அருண்பாண்டி, வேல்முருகன், பாலமுருகன் என மூன்று மகன்கள், ஒரே மகள் பவித்ரா. இவர் அம்மாவுக்கு நேர் எதிரான குணங்களை கொண்டவர். தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க விரும்புகிறவர்.


நேர்மையான வேளாண்துறை அமைச்சர் செழியனுக்கு மகள் பவித்ராவை 2வது திருமணம் செய்து வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அம்மா. இதற்காக பவித்ராவின் காதலன் வருணையும் கொன்று விடுகிறார். வருணின் குழந்தை பவித்ராவின் வயிற்றில் வளர்கிறது. இதனால் அம்மாவை அரசியல் £தீயாக எதிர்க்க துணிகிறார் பவித்ரா. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் கதை.


பவித்ராவாக மனிஷா நடிக்கிறார். வீரலக்ஷ்மியாக சோனா நாயரும், செழியனாக நடிகை நமீதாவின் கணவர் வீராவும், வருணாக கவுரவ் குப்தாவும் நடிக்கின்றனர். தொடரை நடிகை நிரோஷா மற்றும் ராதாவின் 'பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அன்புடன் குஷி: புதிய தொடர்அன்புடன் குஷி: புதிய தொடர் நடிகை ஆனார் காமெடி நிவ்யா நடிகை ஆனார் காமெடி நிவ்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20 பிப், 2020 - 11:35 Report Abuse
skv srinivasankrishnaveni அல்றேடி இதுபோலவந்துருக்கே இப்போதும்கூடகனிமொழி BA என்று ஒரு அச்சுபிச்சு தொடர்வறுது ஆரம்பத்துல பார்த்தேன் பிறகு ஸ்டாப்ட் மௌனிகாநடிக்கும் ஒருகுப்பை சுந்தரிணீயும் ஸுந்தரம் நானும் எல்லாம் கூட அரசியவாடையே தான் இருக்குது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in