Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

16 ஜன, 2020 - 13:42 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-Jayasree-suicide-attempt

கணவர் உடனான குடும்ப பிரச்னை காரணமாக சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ. இவரது கணவர் ஈஸ்வர். இவரும் சின்னத்திரையில் நடிகராக உள்ளார். ராஜா ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வந்த இவர், உடன் நடித்த மகாலட்சுமி உடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது.

ஈஸ்வர், குடித்து விட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தான் என நினைத்து தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதற்காகவே என்னையும், மகளையும் கொடுமைப்படுத்தி வருகிறார். தன்னிடம் இருந்த ரூ.30 லட்சம் பணத்தை அபகரித்துக் கொண்டார் என போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஈஸ்வர் கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜெயஸ்ரீ கூறிய புகார்களை ஈஸ்வரும், மகாலட்சுமியும் மறுத்தனர். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜெயஸ்ரீ, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட பெற்றோர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


முன்னதாக தற்கொலை முயற்சிக்கு முன்னதாக ‛பிக்பாஸ்' புகழ் ரேஷ்மாவிற்கு ஆடியோ செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார் ஜெயஸ்ரீ. அதில், எனக்கு எல்லா விதித்திலும் உறுதுணையாக இருந்த உனக்கு(ரேஷ்மா) நன்றி. நேரம் கிடைக்கும்போது என் மகளை பார்த்துக்கொள். குட்பை நான் கிளம்புறேன் என பேசியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் ஈஸ்வர், அடியாட்களை அனுப்பி ஜெயஸ்ரீயிடம் காரை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இவர் கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே இவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரையில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்சின்னத்திரையில் பொங்கல் சிறப்பு ... அன்புடன் குஷி: புதிய தொடர் அன்புடன் குஷி: புதிய தொடர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

சீனி - Bangalore,இந்தியா
21 ஜன, 2020 - 08:20 Report Abuse
சீனி இட்டலி கடை வைத்திருப்பவர்கள் சின்னத்திரைக்கு வந்தா, உழைப்பது என்ன என தெரியும், தன்ன்னம்பிக்கையோடு வாழவும் தெரியும். மேக்கம் போட்டுகொண்டு டீசண்டாக நடிப்பது போன்று வாழ்க்கையிலும் நடிக்க முடியாது. நிஜ வாழ்வு கொஞ்சம் கடினமானதுதான், அழுக்கு படவேண்டுமானால், மண்ணில் இறங்கி வேலைபார்பதானால் தயாரா இருப்பவர்கள் தான் வாழ்வில் ஜெயிக்கிறார்கள். பல பெண்கள் இன்னும், அரசு கொடுக்கும் புடவைகளை நம்பித்தான், ரேசன் அரிசியை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர், எனவே போலி பந்தா நிஜவாழ்க்கையாகாது.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 ஜன, 2020 - 09:13 Report Abuse
Bhaskaran இரண்டாம் கணவர் என்று சொல்லுங்கள்
Rate this:
TechT - Bangalore,இந்தியா
20 ஜன, 2020 - 10:50Report Abuse
TechTCorrect ....see her smiling face in photo....probably she is ok, just acting for the photo shoot.... She is already married and a baby... and she marries again ( an unmarried man). and nor they accuse each other..... This is the true story.......
Rate this:
oce - tokyo,ஜப்பான்
18 ஜன, 2020 - 05:33 Report Abuse
oce பெண் பாவம் பொல்லாதது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in