Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மகளுக்கு பாலியல் தொல்லை: கணவர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்

04 டிச, 2019 - 10:34 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-Jayasri-slams-her-husband

பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ. கணவனை விவாகரத்து செய்து விட்டு மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் ஜெயஸ்ரீ. ஈஸ்வரும், ஜெயஸ்ரீயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபகாலமாக ஈஸ்வரும், அவருடன் நடிக்கும் இன்னொரு நடிகைக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகைக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தன் கணவர், தன்னை குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து துன்புறுத்துவதாக ஜெயஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வரும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். தாயார் ஜாமீனில் விடப்பட்டார். ஈஸ்வர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் தரப்பினரும் அவரது காதலி தரப்பினரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாய் என்பதை தெரிந்துகொண்டு ஈஸ்வர் அவராகவே விரும்பி என்னை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் என்னிடமும், எனது மகளிடமும் அன்பாகத்தான் நடந்து கொண்டார். நாட்கள் செல்ல செல்ல அவர் சுயரூபம் வெளிப்பட்டது.

அவர் போதைக்கு அடிமையானவர் என்று தெரிய வந்தது. கஞ்சா பயன்படுத்துவார். போதை ஊசி போட்டுக் கொள்வார். சூதாட்ட பழக்கமும் அவரிடம் இருந்தது. இதனால் தினமும் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினார். என் வீட்டு பூஜை அறையைகூட அசிங்கப்படுத்துவார். போதையில் எனது மகளை அடிக்கடி கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சித்தார்.

இதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுமையாக அவருடன் வாழ்ந்தேன். இந்தநிலையில் இன்னொரு டி.வி. நடிகையோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த நடிகையை வேண்டுமென்றே எனது வீட்டுக்கு அழைத்து வருவார். என் கண்முன்னே அந்த நடிகையை கட்டிப்பிடித்து காதல் செய்வார்.

என் பெயரில் சொத்து வாங்குவதற்காக ரூ.30 லட்சம் பணமும், 47 பவுன் நகையும் கொடுத்தேன். ஆனால் அந்த சொத்தை அவரது தாயார் பெயருக்கு எழுதிவிட்டார். இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து உதைத்தார். அவரது மோசமான நடவடிக்கைகளுக்கு அவரது தாயும், தந்தையும் உடந்தையாக இருந்தனர்.

எனக்கு தினமும் அந்த டி.வி. நடிகையிடம் இருந்தும், எனது கணவர் தரப்பில் இருந்தும் கொலை மிரட்டல் வருகிறது. எனக்கும், எனது மகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மற்றொரு நடிகையுடன் தொடர்பு: சின்னத்திரை நடிகர் கைது - மனைவி பரபரப்பு புகார்மற்றொரு நடிகையுடன் தொடர்பு: ... திரும்பவும் சீரியலில் நடிக்கும் தேவயானி திரும்பவும் சீரியலில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

V.B.RAM - bangalore,இந்தியா
04 டிச, 2019 - 12:57 Report Abuse
V.B.RAM எல்லாம் சரி ஒரு குழந்தையை கொடுத்த முதல் கணவனை ஏன் விவாகரத்து செய்தாய் . இப்போது அனுபவி
Rate this:
04 டிச, 2019 - 12:28 Report Abuse
grt jewellers அவனை அடித்து உதைக்க வேண்டும்
Rate this:
மணி - புதுகை,இந்தியா
04 டிச, 2019 - 11:59 Report Abuse
மணி சமூக சீரழிவு
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
04 டிச, 2019 - 11:46 Report Abuse
Visu Iyer சோனியா ஜி க்கு கொடுத்த பாதுகாப்பை விலக்கி உள்ளார்கள்... இவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறார்...?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 டிச, 2019 - 11:04 Report Abuse
skv srinivasankrishnaveni உன்பொன்னை காக்கணும்னா அவன் சிறையேந்து வெளியேவராமல் இருக்க செய்யணும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in