Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மற்றொரு நடிகையுடன் தொடர்பு: சின்னத்திரை நடிகர் கைது - மனைவி பரபரப்பு புகார்

02 டிச, 2019 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Wife-complaint:-TV-Actor-Eshwar-arrested

பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். கல்யாணப் பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது ‛தேவதையை கண்டேன்' தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். சில தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வர் தன்னுடன் நடித்து வரும் ஒரு நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனை மனைவி ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெயஸ்ரீ தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். பின்னர் தாயார் ஜாமீனில் விடப்பட்டார்.
இதுகுறித்து ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறியிருப்பதாவது: எங்களுக்கு கல்யாணமாகி 4 ஆண்டுகளாகிறது. அவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது திருமணத்துக்கு முன்பே தெரியும். ஆனால் அவர் சூதாட்ட பிரியர் என்பதும், அதன் காரணமாக லட்சக்கணக்கில் அவருக்கு கடன் இருப்பதும் திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். அந்த கடன்களையும் நான் தான் அடைத்து வருகிறேன்.

தேவதையைக் கண்டேன் தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் உடன் நடிக்கும் நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டது. அந்த நடிகைக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் நான் இதை கண்டித்தேன். ஆனால் அவர் விவாகரத்து கேட்டு குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் போலீசில் புகார் கொடுத்தேன். என்கிறார் ஜெயஸ்ரீ.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இனி மெகா சீரியல்களுக்கு குட் பைஇனி மெகா சீரியல்களுக்கு குட் பை மகளுக்கு பாலியல் தொல்லை: கணவர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார் மகளுக்கு பாலியல் தொல்லை: கணவர் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
07 டிச, 2019 - 09:42 Report Abuse
Sathiamoorthy.V டிவி சீரியல்களில் எத்தனை குடும்பங்களை சீரழித்து இருக்கிறீர்கள்
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
02 டிச, 2019 - 20:53 Report Abuse
R Sanjay Most of the women is ing this type forgery only
Rate this:
oce - tokyo,ஜப்பான்
02 டிச, 2019 - 16:42 Report Abuse
oce சில நல்ல பெண்களுக்கு இப்படிப்பட்ட அயோக்கியன்கள் தான் கணவன்களாக வருகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in