Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இனி மெகா சீரியல்களுக்கு குட் பை

01 டிச, 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
mega-serials-are-going-to-end

சின்னத்திரை சேனல்களுக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்ப புட்டேஜ் தேவை. அதற்கு தீனி போடுபவை மெகா சீரியல்கள். பொதுவாக தொலைக்காட்சி தொடர்கள் அதிகபட்சம் ஒரு ஆண்டு ஒளிபரப்பாவதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால் பல சீரியல்கள் மூன்று வருடம் ஐந்து வருடம் என ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. பின்பு அதுவே டிரண்ட் ஆனது.

ஆனால் தற்போது மெகா சீரியல்கள் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் வெப்சீரிஸ்கள். 10 முதல் 25 எபிசோடுகள் வரை கொண்ட வெப்சீரிஸ் பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அவற்றை நினைத்த நேரத்தில் மொபைல்போனிலேயே பார்க்க முடியும் என்பது கூடுதல் வசதி. இதனால் சின்னத்திரையில் சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.


அதற்கேற்ப சின்னத்திரை சேனல்களும் மெகா சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருகின்றன. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தறி, மலர் தொடர்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுவிட்டது. அதேபோல தற்போது ஒளிபரப்பாகி வரும் பல மெகா தொடர்கள் வேகமாக முடிவுக்கு வருகிறது.


இதுகுறித்து சேனல் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


ஒரு மெகா தொடர் 5 ஆண்டுகள் ஒளிபரப்பாக வேண்டும் என்ற கலாச்சாரம் மலையேறிவிட்டது. இது வெப் சீரீஸ் காலம். ஒரு கதையின் போக்கு எந்த கட்டத்தில் முற்றுப்பெறுகிறதோ அதுபோதும் என்பதுதான் தற்போதைய நிலவரம். அந்த அடிப்படையில், 'மலர்', 'தறி' ஆகிய 2 தொடர்களின் கதைக்களமும் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்தன. இந்த கதை நகர்வு, தொடர்ந்து சீரியல் பார்த்துவந்தவர்களுக்கு தெரியும். அதனால்தான் தேவையின்றி கதையை வளர்க்க வேண்டாம் என்று முடித்துக்கொண்டோம்.


வெப் சீரீஸ் களம் போல, சில மாதங்கள் மட்டுமே நகர்கிற விறுவிறுப்பான கதைக்களமாக கொண்ட தொடர்கள் இனி ஒளிபரப்பாகும். என்றார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை தயாரிப்பாளர்கள்-பெப்சி ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானதுசின்னத்திரை தயாரிப்பாளர்கள்-பெப்சி ... மற்றொரு நடிகையுடன் தொடர்பு: சின்னத்திரை நடிகர் கைது - மனைவி பரபரப்பு புகார் மற்றொரு நடிகையுடன் தொடர்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
10 டிச, 2019 - 18:54 Report Abuse
Vasudevan Srinivasan சின்னத்திரை தொடர்கள் முதன்முதலில் தொடங்கியபொழுது ஒருதொடர் பதிமூன்று வாரங்களில் முடிந்துவிடும் ஆனால் பின்னாட்களில் தொடர்களெல்லாம் வாரக்கணக்கை தாண்டி மாதக்கணக்கையும் மீறி ஆண்டுகளாக நீண்டுகொண்டுபோவது அபத்தம்.. ஒரு குறிப்பிட்ட காலட்டதோடு முடித்தால்தான் அந்த தொடரின் கதை மக்கள் மனதில் பதியும்.. ஏதோ கடமைக்கு எடுத்து தள்ளுவதை என்னவென்று சொல்ல..?..
Rate this:
BALU - HOSUR,இந்தியா
03 டிச, 2019 - 01:17 Report Abuse
BALU மிகமிக நல்லசெய்தி. இது தலைப்பு செய்தியாக போடவேண்டிய விஷயமாயிற்றே ஆண்டவனுக்கு நன்றி
Rate this:
Krish - Chennai ,இந்தியா
02 டிச, 2019 - 03:36 Report Abuse
Krish ரொம்ப சந்தோஷமான செய்தி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in