Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூப்பர் சிங்கர் பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்ட ஸ்ரீப்ரியா

17 நவ, 2019 - 12:54 IST
எழுத்தின் அளவு:
sripriya-ask-apology-for-comment-on-super-singer-program

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதி சுற்று சமீபத்தில் நடந்தது இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இதில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை வென்றார். அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசளிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை விக்ரம் தட்டிச் சென்றார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் புன்யாவுக்கும், சாம் விஷாலுக்கும் வழங்கப்பட்டது.


இந் நிலையில் இந்த முடிவுகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டரில் விமர்சித்திருந்தார். "விஜய் டிவி தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். நம்பிக்கை புன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷ்க்கு டைட்டில் கொடுக்காத போதே இந்த போங்கு ஆரம்பித்து விட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்" என்று கூறியிருந்தார்.


ஸ்ரீப்ரியாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்ரீப்ரியா மன்னிப்பு கேட்டு தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்த எனது கருத்தில், என் நினைவு தப்பியதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். . மன்னித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நாகினிமீண்டும் நாகினி ரோஜா பிரியங்கா நிச்சயதார்த்தம் முறிந்தது ரோஜா பிரியங்கா நிச்சயதார்த்தம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

bal - chennai,இந்தியா
18 நவ, 2019 - 18:50 Report Abuse
bal விளம்பரம் வேணும்னா இது மாதிரி ஏதாவது பிதற்றுவார்கள்.. அதை ஏன் செய்தியை போடு அவர்களை மதிக்கிறீர்கள்... இவங்க நடித்த லட்சணம் எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
spr - chennai,இந்தியா
18 நவ, 2019 - 17:31 Report Abuse
spr பாமரனும் சங்கீதத்தை புரிந்து கொண்டு பாடுகிறான் அவனை எங்கள் தொலைகாட்சி ஊக்குவிக்கிறது என காட்டிக் கொள்வதே ஒரு விளம்பர யுக்தி அப்பொழுதுதான் அவர்கள் இந்தத் தொலைகாட்சி நிகழ்சசிகளை தொடர்ந்து பார்ப்பார்கள் எப்படி தேர்தலில் படித்த மேல்குடி மக்களை (அவர்கள் ஒரு பொழுதும் தொடர்ந்து ஆதரவு தர மாட்டார்கள் அவர்கள் அறிவைப் பயன்படுத்தி வேட்பாளர்களின் குற்றம் குறைகளை அலசுவார்கள் , வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர்களைக் ) கட்சிகள் புறக்கணிப்பது போல ஊடகங்களும் தொலைகாட்சி அமைப்பாளர்களும் நினைக்கிறார்கள் continuity அவசியம் இதுவும் ஒருவகை சூதாட்டம் மேலும் இதில் கைபேசி மின்னஞ்சல் மூலம் வாக்குப் பதிவு என்பதே வெற்றியாளரை நிர்ணயிக்கும் எனவே அதிலும் காசு பார்க்கலாம் கமலுக்குப் பிடித்திருக்கும்
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
18 நவ, 2019 - 13:22 Report Abuse
S.Ganesan ஸ்ரீப்ரியா சொல்வது உண்மைதான். இங்கே தகுதி எல்லாம் வெறும் எமோஷனல்தான்
Rate this:
Thambi - Madras,இந்தியா
18 நவ, 2019 - 10:06 Report Abuse
Thambi ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ?
Rate this:
selvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 நவ, 2019 - 08:55 Report Abuse
selvaraju ஸ்ரீப்ரியா சொன்ன கருத்தில் ஒரு தப்பும் இல்லை.இன்று வரை தொலைக்காடசி. தகுதி அடிப்படையில் பரிசு வழங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.தொலைக்காடசி நிறுவனத்தார் யாரை பரிந்துரைக்கின்றார்களோ,அவர்களை தேர்ந்து எடுப்பது தான். நடுவர்களின் வேலை.ஏனென்றால்,நடுவர்களை நியமிப்பதும்,சம்பளம் தருவதும் தொல்லை காடசி நிறுவனமே
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in