கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |
நாளை தீபாவளியை முன்னிட்டு சின்னத்திரையில் புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. அதன் விபரம் வருமாறு:
ஆடை
அமலாபால் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ஆடை. இதனை மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கி இருந்தார். எஸ்.கே.ஸ்டூடியோ சார்பில் விஜி சுப்பிரமணியம் தயாரித்திருந்தார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரதீப் குமார் இசை அமைத்திருந்தார். அமலாபாலுடன் ரம்யா, விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் பெரும் பரபரப்புக்கு இடையே வெளியாகி பெரிய அளவில் விவாதத்தையும் உருவாக்கியது. படமும் நல்ல வசூலுடன் வெற்றியும் பெற்றது. படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்ததுதான் படத்தின் பரபரப்புக்கு காரணம்.
ஆள் நடமாட்டமில்லாத ஒரு கட்டிடத்திற்குள் ஒரு பெண் நிர்வாணமாக மாட்டிக் கொண்டால் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சொன்ன படம். நிர்வாண காட்சிகள் முகம் சுழிக்காத வகையில் படமாக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் (26 மற்றும் 27ந் தேதி) மாலை 5 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
ஏ1, காஞ்சனா-3
இது தவிர கே.ஜான்சன் இயக்கத்திலும், எஸ்.ராஜ்நாராயணன் தயாரிப்பிலும் சந்தானம், தாரா அலிசா பெரி நடித்த ஏ1 படம் மாலை 4 மணிக்கும், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3ம் பாகம் மாலை 6.30 மணிக்கும் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
கோமாளி
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இப்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிற படம் கோமாளி. இதில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். ஹிப்ஆப் தமிழாஆதி இசை அமைத்திருந்தார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.
விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற ஒரு இளைஞன் 16 வருடங்களுக்கு பிறகு கண் விழித்தால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம். நாளை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நேர்கொண்ட பார்வை
இந்தியில் வெளிவந்த பிங்கி படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் அஜீத், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் நடித்திருந்தார்கள். எச்.வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் தயாரித்திருந்தார். அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்காக ஒரு மூத்த வழக்கறிஞர் நடத்துகிற சட்டப்போராட்டம் பற்றிய கதை. ஜீ தமிழ் சேனலில் நாளை மாலை 4 மணிக்கு ஒளிப்பாகிறது.