Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தீபாவளி: கோமாளி கொண்டாட்டம்

24 அக், 2019 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Diwali-spl:-Comali-in-Vijay-Television

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இப்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிற படம் கோமாளி. 50 நாளையும், 50 கோடி வசூலையும் தாண்டி இருக்கிறது. இந்த படம் தீபாவளி சிறப்பு திரைப்படமாக விஜய் டி.வியில் 27ந் தேதி பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கோமாளி படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். ஹிப்ஆப் தமிழாஆதி இசை அமைத்திருந்தார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற ஒரு இளைஞன், 16 ஆண்டுகளுக்கு பிறகு கண் விழித்தால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காமெடியாக சொன்ன படம்.

இது தவிர விஜய் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று இரவு 9 மணிக்கு மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தையும் ஒளிபரப்புகிறது. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் உள்பட பலர் நடித்திருந்தனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருந்தார், தீபக் தேவ் ஒளிப்பதிவு செய்திருந்தார். நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். ஒரு நல்ல அரசியல்வாதியின் வளர்ப்பு மகனான லூசிபர் வளர்ப்பு தந்தையின் மறைவுக்கு பிறகு அந்த குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியலில் நடிகை வனிதாசீரியலில் நடிகை வனிதா நேர்கொண்ட பார்வை, கோமாளி, ஆடை, ஏ1, காஞ்சனா 3: தீபாவளி சிறப்பு திரைப்படங்கள் நேர்கொண்ட பார்வை, கோமாளி, ஆடை, ஏ1, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in