Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறார் அஸ்வினி

19 அக், 2019 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Actress-Ashwini-Nambiyar-in-Serial

ஒரு காலத்தில் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் பிசியாக இருந்தவர் அஸ்வினி நம்பியார். ஏராளமான மலையாள சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக இருக்கும் மகராசி என்ற தொடர் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு சினிமா, சின்னத்திரை இரண்டையும் விட்டு விட்டேன். இப்போது மகராசி கதையை கேட்ட உடன் அதில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதில் நான் கோமதி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். தனது நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு மற்றவர்களை கொடுமைப்படுத்துகிற வில்லி கேரக்டர்.

சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி வில்லியாக நடித்ததில்லை. ரொம்ப சாதுவான கேரக்டர்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதனால் இந்த கேரக்டர் எனக்கு சவலாக இருக்கும், 19 ஆண்டு இடைவெளியில் சினிமா நிறைய மாறி இருக்கிறது. டெக்னாலஜி, கதைகள், களங்கள் எல்லாமே மாறி இருக்கிறது. முன்னை விட சக நடிகர்கள் நட்போடும், தோழமையோடும் இருக்கிறார்கள். என்றார்.

இந்த தொடரில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் எஸ்.எஸ்.ஆரியன், விஜய் ஆகியோர் ஹீரோக்கள், பிரவீனா லலிதா பாய், திவ்யா ஹீரோயின்கள். திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அசுரன்' சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டிவி'அசுரன்' சாட்டிலைட் உரிமையை ... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் மோதல் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் மோதல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in