டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
ஒவ்வொரு நொடி பொழுதும் சிவபெருமானையே போற்றி ஆன்மீக தொண்டு ஆற்றியவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அவர்களுடைய சிவதொண்டும் பக்தியும் பல்வேறு மெய்சிலிர்க்கும் சம்பவங்களை ஆன்மீக தருணங்களை உள்ளடக்கியது. தனது பக்தர்கள் தன் மீது கொண்டிருக்கும் பக்தியை சோதித்து பார்க்க சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களில், நாயன்மார்கள் தங்களை வருத்திக் கொண்டு பக்தியை நிரூபித்துக் காட்டியிருப்பார்கள்.
குறிப்பாக சிவனின் கண்களில் ரத்தம் வழிய தனது கண்ணையே பறித்து சிவனுக்கு வைத்தவர் கண்ணப்ப நாயனார். சிவபூதகண வடிவம் பெற்று கைலாய மலைக்கு கைகளாலேயே நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார். இப்படி 63 நாயன்மார்களும் பக்தி என்பதற்கும் இறைத்தொண்டு என்பதற்கும் இலக்கணம் வகுப்பதுபோல் சிவபெருமானை போற்றி கசிந்துருகியிருப்பார்கள். அவர்களின் பக்தியின் உன்னதத்தை எடுத்து காட்டும் “நாயன்மார்கள்” தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.