நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
ஜோதிகா நடித்த காற்றின் மொழி பட தலைப்பில் விஜய் டிவியில் கடந்த 7-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் ‛காற்றின் மொழி'. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த சஞ்சீவ் மற்றும் பிரியங்கா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். அணிலா, மனோகர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
இது காதல் கலந்த குடும்ப நெடுந்தொடர். வாய்பேச முடியாத கண்மணியால் குடும்பத்துக்கு ஆகாது என்று ஜோதிடர் சொன்னதால், அவளை விலக்கி வைக்கின்றனர் குடும்பத்தினர். இந்த நிலையில் அவளது குழந்தைப் பருவ நண்பனான சந்தோஷ், அமெரிக்காவில் படிப்பை முடித்து திரும்புகிறான்.
கண்மணியின் குணம், அழகில் மயங்கி அவளை காதலிக்கிறான். கண்மணியோ, காதலை மறுத்து தன்னை புறக்கணிக்கும் குடும்பத்தை அன்பால் வெல்ல நினைக்கிறாள். கண்மணி மனதில் சந்தோஷ் இடம் பிடிப்பானா? கண்மணியை அவள் குடும்பம் ஏற்றுக் கொள்ளுமா என்பது கதை. சந்தோஷாக சஞ்சீவும், கண்மணியாக பிரியங்காவும் நடிக்கிறார்கள்.