சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் | நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி |
சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார் சாந்தினி. நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நையப்புடை, என்னோடு விளையாடு, பாம்பு சட்டை, கவன், பலூன் உள்பட குறுகிய காலத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிறுபட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகியாக இருந்தார்.
தற்போது சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் தாழம்பூ தொடரில் நாயகியாக நடிக்கிறார். இது பிரமாண்ட ஹிந்தி தொடர்களுக்கு இணையான தொடர்.
இது நாகலோகப் பின்னணி கொண்ட தொடர். நாகலோகத்தின் தலைவர் நாகயோகியின் மகள் வாசுகி. இளம் போர் வீரன் நாகா. இவர்கள் இருவரும் நிச்சயம் ஆனவர்கள். நாகலோகத்தில் இருந்து தொலைந்துபோன ஆத்மலிங்கத்தை மீட்க மானிடனாக மாறி பூலோகம் வருகிறான் நாகா. நாகாவை பின் தொடர்ந்து வருகிறாள் வாசுகி.
லிங்கத்தை வைத்து பூஜிக்கும் குடும்பத்தில் ரேவதி என்ற பெண்ணுடன் பழகுகிறான். ரேவதி அவனை காதலிக்கிறாள். அவன் பாம்பு என்று அவளுக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது. இவர்கள் காதலுக்கு வாசுகி எப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். என்பதை பரபரப்புடன் சொல்லும் கதை. இதில் ரேவதி கேரக்டரில் சாந்தினி நடிக்கிறார். இதை ராஜீவ் மேனனின் உதவியாளர் சண்முகம் இயக்குகிறார்.