Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கடாரம் கொண்டான், கொலைகாரன், ராட்சசி: ஆயுத பூஜை சிறப்பு திரைப்படங்கள்

05 அக், 2019 - 11:03 IST
எழுத்தின் அளவு:
New-films-telecast-in-vijay-television

வருகிற 7ந் தேதி ஆயுத பூஜையும், 8ந் தேதி விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. இதையொட்டி விஜய் தொலைக்காட்சி புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.

ஆயுதபூஜை அன்று அதாவது 7ந் தேதி காலை 10.30 மணிக்கு விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நெர்வால், சீதா, நாசர் நடித்த கொலைகாரன் படத்தை ஒளிப்பரப்புகிறது. ஆண்ட்ரீவ் லூயிஸ் இயக்கிய இந்தப் படத்தை தியா மூவீஸ் சார்பில் பி.பிரதீப் தயாரித்திருந்தார். போப்தா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிட்டிருந்தார். க்ரைம் த்ரில்லர் பாணியிலான இந்தப் படம் வெற்றி பெற்ற படம்.

அன்று இரவு 7.30 மணிக்கு விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹசன், லீனா, நடித்த கடாரம் கொண்டான் படம் ஒளிபரப்பாகிறது. இதனை ராஜ்கமல் பிலிம் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைதிதிருந்தார். அண்டர் கிரவுண்ட் தாதாக்கள் மற்றும் டபுள் ஏஜெண்ட் பற்றிய ஆக்ஷன் படம். பாயின்ட் பிளாக் என்கிற பிரரெஞ்சு படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.

மறுநாள் அதாவது 8ந் தேதி விஜய தசமி அன்று காலை 11 மணிக்கு ஜோதிகா நடித்த ராட்சஸி படம் ஒளிபரப்பாகிறது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். அறிமுக இயக்குனர் கவுதம்ராஜ் இயக்கி இருந்தார், ஷால் ரோல்டன் இசை அமைத்திருந்தார். அரசு பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளை ஒரு துணிச்சலாக ஆசிரியை சரி செய்கிற படம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்தின் பெருமை புரிந்தது!: மனம் திறந்த, 'பிக்பாஸ்' போட்டியாளர்கள்குடும்பத்தின் பெருமை புரிந்தது!: ... சின்னத்திரையில் ஒரு “தில்லு முல்லு” சின்னத்திரையில் ஒரு “தில்லு முல்லு”

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20 அக், 2019 - 05:40 Report Abuse
skv srinivasankrishnaveni பக்திப்படங்கள் வேண்டாமையா ஆனால் நல்ல திரைப்படங்களாக போடலாமே நாளும் கிழமையில கண்றாவியா கொலைகாரன் கொள்ளைக்காரன் மண்ணாங்கட்டி தெருப்புழுதின்னா படம் போடுவது சில டிவி சானைக்கலே வரும் பட்டிமன்றங்கள் தான் ரசிக்கும்படி இருக்கு மற்றவைகள் சுத்த போர் இதுலே மேக்க்ஸிமம் வரது விளம்பரங்களேதான் அதுவாச்சும் ரசிக்கும் விதம்மா இருக்கோ தினம் இதையே எவ்ளோவாட்டி ஆர்ப்பது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in