வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'பிக்பாஸ்' 3வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிச்சுற்றுக்கு போகும் சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் நடிகை ஷெரின் ஆகியோருடன் பேசியதிலிருந்து:
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கற்றது என்ன?
சாண்டி: கற்றது என்றால், குடும்பத்தில் ரொம்ப ஈடுபாட்டோடு, எப்போதுமே நான் இருந்தது இல்லை. நடனம் மட்டுமே என் உலகமாக இருந்தது. இங்கு வந்த பின் தான், குடும்பம் என்றால் என்னவென்று தெரிந்தது. இங்கு வந்த ஒவ்வொருவரிடமிருந்தும், ஒரு விஷயத்தை கற்றேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தது, புகழை எதிர்பார்த்தா?
முகேன்: கண்டிப்பாக புகழை மட்டுமே சம்பாதிக்க வரவில்லை; அது எனக்கு ஏற்கனவே இருக்கிறது. இங்கு வந்தால், ஏதாவது ஒரு விஷயத்தில் மக்களுக்கு, 'ரோல் மாடலாக' இருக்கலாம் என்பது தான்.
நிகழ்ச்சி முடிந்து சென்றதும், நீங்கள் செய்யக்கூடிய முதல் வேலை?
லாஸ்லியா: என் குடும்பத்தாரை சந்திப்பேன். அப்பா - அம்மாவோடு பேச வேண்டும். அவர்கள் இங்கே வந்த போது, சில மணி நேரம் ஒளிபரப்பான காட்சிகளை மட்டுமே பார்த்து வந்திருப்பர். 24 மணி நேரமும் என்ன நடந்தது என்பது எனக்கு தான் தெரியும். நான் சொல்லும் உண்மையை அவர்கள் நம்புவர்.
இங்கிருந்த, 100 நாளில் ரொம்ப கடினமாக இருந்த நாள் எது?
ஷெரின்: வனிதா நல்ல தோழி; ஆனால் அவர், தவறான விஷயத்தை தொடர்ந்து சொல்லிய போது, அன்று முழுவதும் அழுதபடியே இருந்தேன். அடுத்ததாக, தர்ஷன் வெளியேறிய போது கடினமாக இருந்தது.
ஷெரினுக்கும், உங்களுக்கும் உள்ள உறவு?
லாஸ்லியா: நாங்கள் நெருங்கி வந்தபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணமோ அல்லது நண்பர்களாலோ பிரிந்து விடுவோம். இருவருக்குமே மற்றவரை பற்றி முழுவதுமாக தெரியாது. அழகான நட்பு, இப்போது ஆரம்பமாகியுள்ளது.